ராணா, விஷ்ணு விஷால் பாராட்டை பெற்ற ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். அசோக்குமார்

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் […]

Continue Reading

உறியடி முதல் சூரரைப் போற்று வரை தொடர்ந்து சண்டையிடும் விக்கி!

தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது.  குறிப்பாக தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உறியடி” படத்தில் இடம் பெற்ற […]

Continue Reading

“நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” வதந்திகளை நம்பாதீர்கள் – நடிகர் ராஜ்கிரண் பேட்டி

சமூகவலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள் “நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன்” நடிகர் ராஜ்கிரண் கூறினார். தமிழ் பட உலகில், மிக சிறந்த குணச்சித்ர நடிகராக இருப்பவர், ராஜ்கிரண். பிரபல கதாநாயகர்களுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து வருகிறார். இவர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது. இதுபற்றி விசாரிக்க அவரை, ‘செல்போன்’ மூலம் தொடர்பு கொண்டபோது, அவரே பேசினார். அவர் […]

Continue Reading

இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி இவருக்கும் – சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார். கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே […]

Continue Reading

பாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை

ஈஸ்வரன் படத்தில் சிம்பு பாம்பை பிடித்த வீடியோ மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்தது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் சிம்பு கழுத்தில் பாம்பை சுற்றி பிடித்து இருப்பது போன்று போஸ் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் வனப்பகுதியில் மரத்தில் தொங்கும் ஒரு பாம்பை சிம்பு தனது கையால் பிடித்து சாக்கு பையில் போடும் வீடியோ […]

Continue Reading

குதிரை சவாரி பயிற்சி எடுக்கும் திரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க திரிஷா குதிரை சவாரி பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் திரிஷா குதிரை சவாரி பயிற்சி செய்யும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா குதிரை சவாரி செய்வதுபோன்ற காட்சிகள் உள்ளது என்றும், இதற்காகவே அவர் பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பொன்னியின் […]

Continue Reading

அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த நடிகை மீது புகார்

அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த நடிகை பூனம் பாண்டே மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். பிரபல இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவர் தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இதனை பலர் கண்டித்தும் பொருட்படுத்துவது இல்லை. சமீபத்தில் காதலர் சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் […]

Continue Reading

சோனுசூட்டுடன் சந்திப்பு: இந்தி படத்தில் விஷால்?

இந்தி படத்தில் நடிக்கும்படி விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. அங்கு இந்தி நடிகர் சோனுசூட்டை விஷால் சந்தித்து பேசினார். அப்போது இந்தி படத்தில் நடிக்கும்படி விஷாலுக்கு சோனுசூட் அழைப்பு விடுத்துள்ளார். அதனை விஷால் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, ராஜா, கோவில்பட்டி […]

Continue Reading

காஜல் அகர்வால் சினிமாவை விட்டு விலகல்?

நடிகை காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதுபோல் இருப்பதாக பரபரப்பாகி உள்ளது. நடிகை காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதுபோல் இருப்பதாக பரபரப்பாகி உள்ளது. அந்த பதிவில். “இது தாமதமான […]

Continue Reading

எடிட்டர் கோலா பாஸ்கர் காலமானார்

பிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 55. தமிழில் குஷி, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை, கேடி, போக்கிரி, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர். இவர் சில காலமாக தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், பாலகிருஷ்ணா என்ற […]

Continue Reading