தப்பு செய்யும் சாமியார்களுக்கும் தண்டனை வேண்டும்: இயக்குநர் பேரரசு பேச்சு

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசும்போது இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” !

நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில், காமெடி திருவிழாவாக, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ‘ஸ்டார்’ அந்தஸ்தும், அதே நேரத்தில் நம் வீட்டு பையன் போன்ற தோற்றமும் அமைவது மிகவும் அரிது. அப்படிப்பட்ட தகுதியுடன் ஒருவர் வரும்போது உலகளவில் அனைத்து தரப்பினரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தவராக நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய […]

Continue Reading

AYNGARAN INTERNATIONAL தயாரிப்பாளர் K.கருணாமூர்த்தி வழங்கும், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “நிறங்கள் மூன்று”

நடிகர் அதர்வா முரளி, தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாகவும், பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிட்ட அளவிலான வெற்றியை தொடர்ந்து தருவதில், நிலையானவராகவும் வலம் வருகிறார். வணிக வாட்டாரங்கள் விரும்பும் வகையிலான அம்சங்கள் கொண்ட படங்களிலும், அதே நேரம் திரை ஆர்வலர்கள் விரும்பும் வகையிலான அழுத்தமான கதைகளை கொண்ட படங்களையும் சமன்படுத்தும் வகையில் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து, அனைவரையும் ஆச்சர்யபடுத்தி வருகிறார். புதிய வரவுகளான தமிழின் இளம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர் தரும் ஒத்துழைப்பு, அவருக்கு திரைத்துறையில் மிக நல்ல […]

Continue Reading

இயக்குனராகும் பிரபல இயக்குனரின் மகன்

பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார்.  வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன்.இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார்.மிகவும் புத்திசாலித்தனமான கதை களம். நறுக்கிய வசனம். இசை கூடுதல் பலம்.”அறியா திசைகள்” பலரின் […]

Continue Reading

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின் நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும் இரண்டாவது படம் இது.இந்த படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் […]

Continue Reading

Super Good Films RB சௌத்திரி வழங்கும்,  இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” 

நடிகர் ஜீவாவும் அவரின் ரோம்-காம் படங்களும் பிரிக்க முடியாதவை. திரையுலகில் அவரது வெற்றிப் பயணத்தில் ரோம்-காம் படங்களுக்கென்று ஒரு தனித்துவமான இடமுண்டு. ‘சிவா மனசுல சக்தி’ போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்கள் தாண்டி இன்னும் எண்ணற்ற திரைப்படங்கள் நீளும் இந்த வரிசையில், தற்போது ஜீவா மீண்டும்    ‘வரலாறு முக்கியம்’ என்ற ரோம்-காம் படம் மூலம் ரசிகர் கூட்டத்தின் கவனத்தை ஈர்க்கவிருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் […]

Continue Reading

அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை – நடிகை ஹன்ஷிகா மோத்வானி !

இந்தியாவெங்கும் அனைவராலும் விரும்பப்படும் நடிகையாக விளங்கும் ஹன்சிகா மோத்வானியின் திரைப்பயணம், எண்ணற்ற அற்புதமான திரைப்படங்களால் ஆனது. அவரது தொடர் வெற்றிப்படங்களும் அதில் அவரது திறமையான நடிப்பும், அவரை ரசிகர்களுக்கு நெருக்கமானவராக மாறியிருக்கிறது. நடிகை ஹன்ஷிகா தொழில்துறையில் அவரது அர்ப்பணிப்பை தாண்டி, அவரது அன்பான நல்ல உள்ளத்திற்காக திரைத்துறையில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு நபராக விளங்குகிறார். இந்த 2022 புத்தாண்டில் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் மிகப்பிரமாண்டமான ஒன்பது வெளியீடுகளைப் பெற்றுள்ளதால், அவர் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். இதில் பார்ட்னர், […]

Continue Reading

ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் படமாக்கப்பட்டன

ஜாகுவார் ஸ்டுடியோஸின் பி வினோத் ஜெயின் தயாரிப்பில் பொன்குமரன் இயக்கத்தில் ஜீவா-மிர்ச்சி சிவா நடிக்கும் கோல்மால் படத்தின் முக்கிய காட்சிகள் மொரீஷியஸில் வெற்றிகரமாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விடுமுறைக்காக படக்குழு சென்னை திரும்பியுள்ளது. சென்னையில் சில முக்கிய காட்சிகளை படமாக்கிய பின்னர் ஜனவரி மாதம் மொரிஷியஸுக்கு கோல்மால் குழுவினர் மீண்டும் செல்லவுள்ளனர். “கடந்த மாதம் மொரீஷியஸில் படப்பிடிப்பை ஆரம்பித்து சுமார் 25 நாட்கள் முக்கியப் பகுதிகளை படமாக்கியுள்ளோம். அனைத்துக் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. முழுநீள நகைச்சுவைப் படமாக அனைத்துப் […]

Continue Reading

அதிக திரையரங்குகளுக்காக தள்ளிப்போகிறது’அடங்காமை ‘ திரைப்படம்: 2022 ஜனவரியில் வெளியாகிறது !

திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’,இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.தேவையான எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் அதிக திரையரங்குகளில் வெளியிடும் நோக்கில் 2022 ஜனவரியில் ‘அடங்காமை’ உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்துக்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர். கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக ‘மங்களாபுரம்’ என்ற படத்தை இயக்கியவர். இது இவருக்கு இரண்டாவது படம்.இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக […]

Continue Reading

தெருக்கூத்து கலைக்கு ஆதரவு தரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆனால் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கிறது. நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான […]

Continue Reading