ரீமேக் படத்தில் நடிக்கும் உதயநிதி

இந்தியில் வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்டிகிள்15’ ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவா, சயானி குப்தா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அனுபவ் சின்ஹா இயக்கினார். ஒரு கிராமத்தில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்றனர். அதை விசாரிக்கும் அதிகாரிக்கு சாதியின் பெயரால் தொல்லைகள் வருகின்றன. […]

Continue Reading

கொரோனா விழிப்புணர்வு படத்தில் நடித்த யோகிபாபு

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணியவும் சமூக விலகலை கடைபிடிக்கவும் கைகளை அடிக்கடி கழுவவும் வற்புறுத்தி அரசு விழிப்புணர்வு படங்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படங்களில் சசிகுமார், சுஹாசினி, தேவயானி ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படங்களை கட்டில் திரைப்படத்தை டைரக்டு செய்து வரும் இ.வி.கணேஷ்பாபு இயக்கினார். தற்போது அரசின் இன்னொரு கொரோனா விழிப்புணர்வு படத்தையும் அவர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்து இருக்கிறார். அவருடன் மனோபாலாவும் […]

Continue Reading

வில்லியாக நடிக்க ஆர்வம் காட்டும் – சமந்தா

நடிகை சமந்தா கொரோனா ஊரடங்கில் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கவர்ச்சியாக நடித்தால் அதற்குதான் பொருத்தம் என்று முத்திரை குத்தி விடுவார்கள். நான் வந்த புதிதில் வணிக படங்களில் நடித்தேன். கடவுள் அருளால் அவை வித்தியாசமான கதைகளாகவும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களாகவும் அமைந்தன. எனக்கு வில்லியாக நடிக்க ஆர்வம் உள்ளது. பேமிலி மேன் என்ற வெப் தொடரில் வில்லி வேடம் கிடைத்துள்ளது. இது எனது கனவு கதாபாத்திரம் ஆகும். திருமணம் ஆனபிறகும் எனக்கு வித்தியாசமான கதைகளும் ரசிகர்கள் […]

Continue Reading

வெற்றி, தோல்வி இரண்டும் சமம் – நடிகை சாய்பல்லவி

கொரோனா ஊரடங்கில் நடிகை சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு: “நல்லது கெட்டது எது நடந்தாலும் நமது நன்மைக்குத்தான் என்று நினைத்துக்கொள்ளும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து விட்டேன். எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்தன. தொடர்ந்து வெற்றியை பார்க்கும் நான் படம் தோல்வி அடைந்தால் அதை எப்படி எடுத்துக்கொள்வேன் என்று கேட்கிறார்கள். எது வந்தாலும் நமது நல்லதுக்கு என்றே நினைத்துக்கொள்வேன். வெற்றிக்காக ரொம்பவும் சந்தோஷப்பட மாட்டேன். தோல்வி என்றால் அதையே நினைத்து அழுதுகொண்டும் […]

Continue Reading

லாபம் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த எதிர்பார்ப்புக்குரிய படமாக லாபம் உள்ளது. இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் 2015-ல் புறம்போக்கு என்கிற பொதுவுடமை வந்தது. லாபம் படத்தில் சுருதிஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா ஆகியோரும் உள்ளனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் பாக்கி உள்ளது கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் அதை முடித்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். லாபம் […]

Continue Reading

ஓ.டி.டி.யில் வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்து ஊரடங்கினால் திரைக்கு வராமல் உள்ளது. இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன்தாஸ், கவுரி கிஷன் ஆகியோரும் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தை தியேட்டருக்கு பதிலாக இணைய தளமான ஓ.டி.டியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் இதற்காக முன்னணி ஓ.டி.டி தளம் சார்பில் படக்குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. தியேட்டர் அதிபர்களோ ஊரடங்கு முடிந்ததும் […]

Continue Reading

பிக்பாஸ் சீசன் 4 வைரலாகும் கமலின் புதிய தோற்றம்

தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. விரைவில் பிக்பாஸ் 4-வது சீசனுக்கான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் […]

Continue Reading

பணம் முக்கியம் இல்லை கதை தான் முக்கியம் – ராஷி கண்ணா

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான்பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் […]

Continue Reading

வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார்

அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார். அசாமில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். சுமார் 50 லட்சம் போ் […]

Continue Reading

திரிஷா எடுத்த திடீர் முடிவு – குழப்பத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 17 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்தாண்டு மலையாளத்திலும் அறிமுகமானார். இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் வீட்டிலேயே இருக்கும் திரிஷா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி […]

Continue Reading