ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் “சூர்ப்பனகை” திரைப்படம் அதன் தலைப்பு மற்றும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றால், ரசிகர்கர்களிடம் பேராதரவை பெற்றுள்ளது. சமீபத்திய வெற்றிபடங்கள் மூலம் இந்திய அளவில் ரசிகர்கர்களை பெற்றுள்ள, நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு , முழுமையாக முடிவடைந்ததாக, இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் ராஜு கூறியதாவது… “சூர்ப்பனகை” படத்தின் […]

Continue Reading

இதுவரை நடிக்காத வேடத்தில் ‘யோகி பாபு’! காமெடி சரவெடியாக உருவாகி வரும் ‘வீரப்பனின் கஜானா’

யோகி பாபுவை யூடியூபராக களம் இறக்கும் ‘வீரப்பனின் கஜானா’ தலைப்பு மூலமாகவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படத்தின் மற்றொரு புதிய தகவலால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.’ராட்சசி’ பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் ‘வீரப்பன் கஜானா’ காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.இப்படத்தில் யோகி பாபு இதுவரை […]

Continue Reading

சாட்டிலைட் விற்பனையில் சாதனை பதித்த”RAPO19″

நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் #RAP019 படத்தை ஆனந்தம், ரன், சண்ட கோழி, பையா, வேட்டை, அஞ்சான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய N.லிங்குசாமி இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க ஆதி வில்லனாக நடிக்கின்றார். நதியா மற்றும் ஜெய பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகனான ராம் பொத்தினேனி சென்னையில் படித்தவர். பல வெற்றி படங்களில் நடித்துள்ள ராம் பொத்தினேனி சமீபத்தில் வெளியான Ismart […]

Continue Reading

“ஆபரேஷன் அரபைமா” படப்பிடிப்பு நிறைவடைந்தது. ரகுமானின் படை ஆபரேஷனுக்கு ரெடி!

முன்னாள் கடற்படை வீரர் பிராஷ் இயக்கத்தில் ரகுமான் கதாநாயகனாக நடித்திருக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.துருவங்கள் பதினாறு படத்திற்குப் பின் அந்நிய எதிரிகளை வேட்டையாட தன் படையுடன் கடற்படை அதிகாரியாக வருகிறார் ரகுமான்.நம் நாட்டை அந்நிய ஆபத்துகள் சூழும் நேரங்களிலும், தீயவர்கள் நம் நாட்டிற்குள் கொடுஞ்செயல்கள் செய்யும் நோக்கத்துடன் நுழையும் நேரங்களிலும், நமது இராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்துகளிடம் இருந்தும் எதிரிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கின்றனர். அதற்காக பல ஆபரேஷன்களை நம்நாட்டு […]

Continue Reading

‘புராஜெக்ட் அக்னி’ முழுநீள படமாகிறதா?

துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜியில் ‘புராஜெக்ட் அக்னி’ என்கிற குறும்படத்தை இயக்கி இருந்தார். அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா நடிப்பில் வெளியாகி இருந்த இந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் பட ரேஞ்சில் இருந்ததாக பாராட்டுக்களும் கிடைத்தன. இப்படத்தை முழு நீள படமாக எடுக்குமாறு ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளம் வாயிலாக கார்த்திக் நரேனுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.     […]

Continue Reading

நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், காதல் மற்றும் காமெடி படமான டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகனும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் போன்ற முக்கிய திரை நட்சத்திரங்களும் இதில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இப்படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது.  அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், இயக்குனர் உட்பட […]

Continue Reading

சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஷீரோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ’ ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஷீரோ’, இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடித்திருக்கிறார். மனோஜ் குமார் காதோ ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தைப் பற்றி இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்,‘ஷீரோ’ ஒரு சைக்கலாஜிக்கல் […]

Continue Reading

சூரரைப் போற்று இந்தி உரிமை விவகாரம்: ஆதாரமற்ற குற்றச்சாட்டு என இனை தயாரிப்பாளர் விளக்கம்

சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.”கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர, […]

Continue Reading

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் நீதிமன்றம் சரமாரி கேள்வி

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் நீதிமன்றம் சரமாரி கேள்வி தளபதி விஜய்யின் சொகுசு கார் வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் நடந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தனுஷின் சொகுசு கார் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷன் வழக்கறிஞர் மனுவை திரும்பப் பெறுவதாகவும் வரும் திங்கட்கிழமைக்குள் நுழைவு வரியை கட்ட தயார் என்றும் எனவே மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கூறினார் மனுவை திரும்ப பெற அனுமதிக்க […]

Continue Reading

அமேசான் பிரைமில் வெளியாகிறது சூரியாவின் நான்கு திரைப்படங்கள்

சூரியாவின் 2டி நிறுவனத்துடன் அமேசான் பிரைம் நிறுவனம் ஒப்பந்தம்   எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவனம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய் பீம்’, ‘உடன்பிறப்பே’, […]

Continue Reading