ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வரும் நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த கருத்து

நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு குறித்த நீதிமன்ற கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை. கொரோனா தொற்று போன்ற […]

Continue Reading

வைரலாகும் நாசரின் புதிய அவதாரம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாசர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகவும் திறமையாக நடித்து கொடுப்பவர். சிறிய கதாபாத்திரம் என்றாலும் கூட தன்னுடைய தனித்திறமையால் ஸ்கோர் செய்துவிட்டு செல்வார். பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எதிர்நாயகன் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படத்தில் ஆளே மாறி போய், புதிய தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே […]

Continue Reading

“ஜென்டில்மேன்-2” ஆரம்பம் ! பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் அறிவிப்பு.

“ஜென்டில்மேன்-2” ஆரம்பம் ! பிரமாண்ட தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் அறிவிப்பு. கதை சொல்லும் சினிமா,பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்புகளில்.. கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாக தயாரித்துக் காட்டியவர் கே.டி.குஞ்சுமோன். வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”. ஷங்கரை டைரக்டராக அறிமுகப்படுத்திய படம். நாயகன் அர்ஜுனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம். ஏ.ஆர்.ரஹ்மானின் அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. படத்தின் வியாபாரத்தை தாண்டி பல மடங்கு செலவு செய்து […]

Continue Reading

நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் பல்வேறு மொழிகளில் உருவாகும் “கமனம்”

நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பில் பல்வேறு மொழிகளில் உருவாகும் “கமனம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் கிரிஷ் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்! கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவுலகில் வசீகர முகத்தாலும், காந்த பார்வை கொண்ட கண்களாலும், தனித்துவமிக்க நடிப்பாலும் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரேயா சரண் சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார்.இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக […]

Continue Reading

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித், இவர் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிற்கிறது. எஞ்சியுள்ள படப்பிடிப்பை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படம் குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் சமீபத்தில், பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனம் அஜித்தின் 61-வது படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வலம்வந்தன. இந்நிலையில், அதுகுறித்து ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அர்ச்சனா […]

Continue Reading

புதிய நிறுவனம் தொடங்கிய சமந்தா

முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். தமிழ், தெலுக்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். உடை விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்து பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம். அந்த விருப்பத்தை சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான […]

Continue Reading

பா.ஜனதாவில் இணைய உள்ளாரா சிவகார்த்திகேயன்?

பா.ஜனதாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரசாரத்துக்கு நடிகர், நடிகைகளை இழுக்க அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி இறங்கி உள்ளன. ரகசிய தூதுகளும் அனுப்புகின்றன. ஏற்கனவே சில கட்சிகள் நடிகர், நடிகைகளை தங்கள் கட்சியில் இணைத்து பிரசார பயிற்சிகள் அளிக்க தொடங்கி உள்ளன. கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணத்தில் கூட்டங்களை சேர்க்கவும் இவர்களை பயன்படுத்த உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை பா.ஜனதா கட்சிக்கு இழுக்க முயற்சிகள் […]

Continue Reading

ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ்

ஜி.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்: ஒன்றிணையும் ஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் புதிய முயற்சி எடுக்கும் போது, சிலர் பக்கபலமாக இருந்தால் கூடுதல் பலம் கிடைத்தது போல் உணர்வோம். ஆனால், திரைத்துறையில் புதிய முயற்சிகள் எடுக்கும் போது “ஏன் இவருக்கு இந்த வேலை” என்று பேசுவதற்கே பலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே புதிய முயற்சிக்கு நாங்கள் கைக் கொடுக்கிறோம் என்பார்கள். அப்படியொரு கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது. ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ என்று தொடரும் ஜி.வி.பிரகாஷின் இசைப் பாய்ச்சல் அடுத்தது […]

Continue Reading

திகில் படத்தில் பிரியாமணி

தமிழில் பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். 2017-ல் திருமணம் செய்து கொண்டு சிறிது காலம் ஒதுங்கிய அவர் மீண்டும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது புதிய திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்துக்கு ‘கொட்டேஷன் கேங்க்’ என்று பெயர் வைத்துள்ளனர். தாதாக்கள், ரவுடிகளை பற்றிய படமாக தயாராகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கின்றனர். இந்த படத்தை […]

Continue Reading

எஸ் பி பி யின் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து […]

Continue Reading