ஓ.டி.டி தளத்தில் நாளை வெளியாகிறது வைபவ்வின் ‘லாக்கப்’

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன. இந்தநிலையில் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன், பூர்ணா ஆகியோர் நடித்துள்ள லாக்கப் படமும் நாளை (14-ந்தேதி) இணையதளத்தில் வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். எம்.ஜி.சார்லஸ் இயக்கி உள்ளார். இதுகுறித்து வைபவ் கூறும்போது, ‘துப்பறியும் […]

Continue Reading

நான் எழுதிய சுயசரிதை பணி முடிந்துள்ளது-பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா 2000-ம் ஆண்டு இந்திய அழகியாக தேர்வானார். தொடர்ந்து உலக அழகி பட்டமும் வென்றார். விஜய் நடித்த தமிழன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி முடித்துள்ளார். விரைவில் இதனை புத்தகமாக வெளியிடுகிறார். தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் எழுதிய சுயசரிதை பணி முடிந்துள்ளது. அதை புத்தகமாக வெளியிட ஆவலாக இருக்கிறேன். எனது வாழ்க்கையில் நடந்த […]

Continue Reading

‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ நேற்று (ஆகஸ்ட் 8) வெளியானது. இந்தப் பாடல் 2021-ல் ஸ்ருதிஹாசன் வெளியிடவுள்ள ஆல்பத்தின் அங்கமாக உள்ள பாடலாகும். ‘எட்ஜ்’ பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இது ஸ்ருதிஹாசனின் மற்றொரு பரிமாணம். இதற்கு எந்தளவுக்கு […]

Continue Reading

தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி! அமைச்சர், ஆட்சியர் பாராட்டு!

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.விஜயபாஸ்கர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் திரு. மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் […]

Continue Reading

முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார் சந்தோஷ் கிருஷ்ணன்

Sri Devi Entertainment சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார். பல தமிழ் படங்களுக்கு finance செய்து வரும் சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார். பாகுபலி,கபாலி, கத்தி,விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயகுனராக அறிமுகம் ஆகிறார். தொடுப்பி மற்றும் கருப்பு கண்ணாடி படத்தின் கதாநாயகனாக […]

Continue Reading

விஜய்யுடன் மாளவிகா சமூக வலைதளங்களில் வைரலாகும் மாஸ்டர் சர்ப்ரைஸ் போஸ்டர்

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் […]

Continue Reading

தனுஷுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில்-ஹன்சிகா?

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் இரண்டு […]

Continue Reading

பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்!

’தாய்நிலம்’ என்ற திரைப்படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் திரைப்பட உலகிற்கு காலெடுத்து வைதிருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன்… மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த தாய்நிலம் நிறைவுபெற்று ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந் நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) கதாநாயகனாக நடித்துள்ளார். பஹாமாஸ் நாட்டின் உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது….இந்த விழாவிற்காக இந்தியாவில் இருந்து தேர்வு […]

Continue Reading

ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என்று கலக்கும் துரை சுதாகர்

கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்வர் துரை சுதாகர். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய அவர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து களவாணி 2 படத்தில் கலக்கினார். தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் ‘டேனி’ படத்தில் மிடுக்கான தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் டேனி திரைப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் […]

Continue Reading

கருப்பு வெள்ளை சேலஞ்சுக்கு மாறிய நடிகைகள்

கொரோனா ஊரடங்கு சமயத்தில் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். பலரும் சமூக வலைத்தளத்தில் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். புகைப்படங்களை பதிவிட்டு வரும் சிலர் கொஞ்சம் எல்லை மீறி ஆபாசப் படங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிய சேலஞ்ச் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. ‘பெண்களுக்கு ஆதரவாக பெண்கள்’ அதாவது, “Women supporting women” என்ற சேலஞ்சை ஆரம்பித்து வைத்தார்கள். அந்த சேலஞ்சில் கருப்பு வெள்ளை புகைப்படங்களை பிரபலங்கள் பதிவிட வேண்டும். இந்த சேலஞ்ச் தற்போது […]

Continue Reading