வைரலாகும் சாண்டியின் பிக்பாஸ் சீசன்4 புகைப்படம்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர் இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா விழிப்புணர்வுடன் கூடிய பிக்பாஸ் 4 புரமோ ஒன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்த புரோமோவின் ஆரம்பத்தில் கமல் நடனம் ஆடியபடி […]

Continue Reading

வைரலாகும் தளபதி 65 அப்டேட்

விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதனிடையே விஜய்யின் 65-வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. முருகதாஸ் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு […]

Continue Reading

புதிய களத்தில் கீர்த்தி சுரேஷ்

நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளராக களமிறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Continue Reading

பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் பிரியா பவானி சங்கர்?

மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது, கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். இதுதவிர ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவர் இயக்கும் ‘அகம் பிரம்மாஸ்மி’ படம் மூலம் தெலுங்கில் […]

Continue Reading

ஹாலிவுட்டில் ஆல்பம்: அடுத்த அசுரப் பாய்ச்சலில் ஜி.வி.பிரகாஷ்

சில வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் என்பது நமக்கு எட்டாத கனியாக இருந்தது. ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். இப்போது இந்தியாவில் ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பும், ஹாலிவுட் படத்தில் இந்தியக் கலைஞர்கள் பணிபுரிவது ரொம்பவே சாதாரணமாகிவிட்டது. அதே போல் ஆங்கிலத்தில் ஆல்பம் என்பது நாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். எப்போது நம்ம ஆட்கள் இப்படியெல்லாம் ஆல்பம் தயாரித்து வெளியிடுவார்கள் என்ற ஏக்கம் இருந்தது. அதையும் இப்போது ஒருவர் […]

Continue Reading

இந்திய சினிமாவின் முதல் முயற்சி… திரைத்துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஜதுரா

தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களை அதிக பேர் ரசிக்க காரணம் விஷுவல் எபெக்ட்ஸ். சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய படங்கள் உலக மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த தரத்தில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக முழுக்க முழுக்க விஷுவல் எபெக்ட்ஸுடன் கூடிய ‘ஜதுரா’ என்னும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம் உருவாகி வருகிறது. ஜதுரா என்கிற தமிழ் மொழி திரைப்படம், இந்தியாவில் முதல் முறையாக ரியல் டைம் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் விர்சுவல் புரொடக்‌ஷன் முறையில் படமாக்கப்பட்டு […]

Continue Reading

‘வலிமை’ படத்திற்காக போனிகபூரிடம் அஜித் கொடுத்த வாக்குறுதி

நடிகர் அஜித், போனிகபூரிடம் ஒரு வாக்குறுதி அளித்துள்ளார். அஜித்குமார் கதாநாயகனாக நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அஜித், ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார். படத்துக்காக அஜித், 6 பேக் உடற்கட்டுக்கு மாறுகிறார். ‘வலிமை’ படத்தின் 2 கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அஜித் […]

Continue Reading

நடிகர் அதர்வா தம்பிக்கு திருமணம்

அதர்வா முரளியின் இளைய சகோதரர் ஆகாஷ், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் ப்ரிட்டோ மகள் இயக்குநர் சினேகா ப்ரிட்டோ இருவரும் திருமண வாழ்வில் இணைந்துள்ளார்கள். இவர்களின் திருமண விழா, குடும்ப உறவுகள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்க, சென்னை கிழக்குகடற்கரை சாலையில், திருக்கழுகுன்றத்தில் உள்ள தனியார் வாளகத்தில் ஆகஸ்ட் 24, 2020 அன்று மாலை 3 மணி முதல் 4 மணி வாக்கிலாக இனிதே அரங்கேறியது. கொரோனா முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் விழிப்புணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டு, இவ்விழா இனிதே கொண்டாடப்பட்டது. […]

Continue Reading

வரும் தேர்தலில் களம் இறங்குமா ஆன்மீக அரசியல் ?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தொடர் ஊரடங்கு பம்பரம் போல் சுழன்றுகொண்டிருந்த, சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களைக் கூட வீட்டிலேயே முடக்கிப் போட்டுவிட்டது. நடிகர் ரஜினியும் வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வெடுத்து வருகிறார். அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை. அதேபோல், அவர் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்விரைவில் கட்சி தொடங்குவார் என்று, அவரது ரசிகர்கள் பலர் […]

Continue Reading

தமிழக அரசியல் களம் உங்களைக் காணக் காத்திருக்கிறது – கமல்ஹாசன்

தே.மு.திக வின் தலைவரும் நடிகருமான திரு விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளான இன்று. மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான திரு கமல்ஹாசன் அவர்கள்.மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் மீண்டும் முழு வீச்சில் உங்களைக் காணக் காத்திருக்கிறது; மக்கள் பணியைத் தொடர வாழ்த்துக்கள் நண்பர் @iVijayakant அவர்களே.

Continue Reading