காக்கா முட்டையில் நடித்த சிறுவர்களா இது.. – வைரலாகும் புகைப்படம்

காக்காமுட்டை படத்தில் சிறுவர்களாக நடித்திருந்த விக்னேஷ்-ரமேஷ் ஆகிய இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன தனுஷ் தயாரிப்பில், கடந்த 2014-ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘காக்கா முட்டை’. குப்பத்து பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள், உயர்ந்த வர்க்கத்தினரால் சாப்பிடப்படும் உணவான பீட்சாவை சாப்பிட எடுக்கும் முயற்சிகளை கதையாக கொண்டு இயக்கியிருந்தார் மணிகண்டன். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்தது. இதில் சிறுவர்கள் விக்னேஷ்-ரமேஷ் இருவரும் பெரிய காக்கா முட்டை, சின்ன […]

Continue Reading

முதன்முறையாக இணைந்து நடிக்கும் சூர்யா-கார்த்தி?

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி-சூர்யா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.             “கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேசம்” என்று கூறப்படும் கேரள மண்ணில் தயாரான சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில், ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், […]

Continue Reading

ராணாவின் திருமணம் எப்போது? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ராணாவின், திருணம் எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய காதலி மிஹீகாவை சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. ராணாவுக்கும் ஐதராபாத்தை […]

Continue Reading

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் அட்லீயின் அடுத்த படம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ, தனது அடுத்த படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. […]

Continue Reading

ரஜினி பட இயக்குனருடன் இணையும் விக்ரம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் அடுத்ததாக ரஜினி பட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   நடிகர் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்திவந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியது. இதுதவிர விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துவருகிறார். இந்நிலையில், […]

Continue Reading

ரீமேக் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் சுருதிஹாசன்?

ரஜினி, கமல் இணைந்து நடித்த ‘அவள் அப்படித்தான்‘ படத்தின் ரீமேக்கில் சிம்புவுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.       ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்து 1978ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘அவள் அப்படித்தான்.‘ இதில் ஸ்ரீப்ரியா கதாநாயகியாக நடித்து இருந்தார். ரஜினிகாந்த் விளம்பர நிறுவனம் நடத்துபவராகவும் அவரது அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக ஸ்ரீப்ரியாவும், கமல்ஹாசன் ஆவணப்பட […]

Continue Reading

‘பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..!

திரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு.. பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் ‘தேசிய தலைவர்’..! ‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ்  இயக்கும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’..! பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ‘ஊமை […]

Continue Reading

சினிமா டிக்கட்விலை குறைப்பு-திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடி

  தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க மார்ச் 19 அன்று திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது மார்ச் 31 முதல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு தமிழகத்தில் இன்றுவரை சில மாற்றங்களுடன் தொடர்ந்து வருகிறது கொரானோ தொற்று பரவலை பொறுத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என எல்லா தொழில்களையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது […]

Continue Reading

ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றிய சந்தானம்

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்திற்காக நடிகர் சந்தானம் ஒரே நாளில் 48 முறை கெட்-அப் மாற்றினாராம். சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் யோகி சமீபத்திய […]

Continue Reading

போலீசுக்கு 1 லட்சம் கிருமி நாசினி பாட்டில்கள் வழங்கிய சல்மான்கான்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் போலீசுக்கு 1 லட்சம் கிருமி நாசினி பாட்டில்களை வழங்கியுள்ளார்.   நாட்டின் மற்ற நகரங்களை காட்டிலும் மும்பை தான் ஆட்கொல்லி வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நின்று போராடும் போலீசாரும் இங்கு அதிகளவில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர். இந்த நிலையில், இந்தி நடிகர் சல்மான்கான் தான் சமீபத்தில் தொடங்கிய பிரஷ் எனும் பராமரிப்பு மற்றும் சீர்படுத்துதல் பிராண்டு தயாரிப்பான கிருமிநாசினியை […]

Continue Reading