என்னை நானே செதுக்கிக் கொள்ள கற்றுக்கொடுத்தது அஜித் தான்-பிரசன்னா நெகிழ்ச்சி

நடிகர் அஜித், சினிமாக்கு வந்து 28 ஆண்டுகள் ஆவதையொட்டி நடிகர், நடிகைகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அஜித்தின் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடுகிறார்கள். அமராவதி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அஜித் தொடர்ந்து வான்மதி, காதல் கோட்டை, ராசி, உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வரலாறு, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், வேதாளம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அவரது இந்த 28 […]

Continue Reading

லாரன்சுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை?

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தினார். பின்னர் சிம்ரன் சந்திரமுகியாக நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. அவரும் இதனை திட்டவட்டமாக மறுத்தார். இந்நிலையில், சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்க பிரபல […]

Continue Reading

எங்கள் நினைவில் நீங்கள் – அப்துல்கலாம் குறித்து விவேக் உருக்கம்

விண்வெளி, அறிவியல், நிர்வாகம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இமாலய சாதனைகளை படைத்தவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் திடீரென்று மயங்கி விழுந்து, இறந்தார். இன்று அவரது 5-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பலரும் அப்துல் கலாம் குறித்த தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அப்துல் கலாம் மீது மிகுந்த […]

Continue Reading

புதிய தளத்தில் காலடி வைக்கிறார்-ஸ்ருதி ஹாசன்

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள புதிய தளத்தில் காலடி வைக்கிறார். ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனை குறிப்புகள் என தனது சமூக ஊடக ரசிகர்களுக்காக செய்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிடவிருக்கிறார். […]

Continue Reading

மிரட்டலான தோற்றத்துடன் வெப் தொடரில் அறிமுகமாகும் சரத்குமார்

வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள். சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால், பரத், பாபி சிம்ஹா, மீனா, நித்யா மேனன், சீதா ஆகியோர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் சரத்குமாரும் வெப் தொடரில் நடிக்கிறார். இதனை நடிகை ராதிகா சரத்குமார் சமூக வலைதளத்தில் தெரிவித்து உள்ளார். வெப் தொடரில் நடிக்கும் சரத்குமாரின் தோற்றங்களையும் வெளியிட்டு உள்ளார். அதில் சரத்குமார் நீளமான […]

Continue Reading

கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனாவுக்கு சவால் விட்ட சமந்தா

சமூக வலைதளங்களின் வாயிலாக புதிய புதிய சேலஞ்ச்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக விடுத்து வருகின்றனர். தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார். இதை நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் ஏற்று மரம் நட்டனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் […]

Continue Reading

முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டாக்டர் படக்குழுவினர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் அப்டேட் வேண்டும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக […]

Continue Reading

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்காக அவர்கள் ரசிகர்கள் செய்த பிரம்மாண்டம்! ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள்தான். தங்களது அன்பை வெளிபடுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளை செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். நடிப்பிலும், அறச்செயலிலும் முதன்மையாக இருந்து வரும் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வருகிர 23 ஜூலை அன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை உலகமுழுவதும் தெரியப்படுத்த அவரது […]

Continue Reading

என்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்

    நடிகர் விஜய்சேதுபதி கொரோனா ஊரடங்கில் இணையதள கலந்துரையாடல் மூலம் சுவாரஸ்யமான சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது: “ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம். திரையில் அது எப்படி வரும்.         ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து வைத்து இருப்பார். ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பானதாக […]

Continue Reading

சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்காக அவர் நடிக்கும் படங்கள் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தெலுங்கில் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில், விஜய் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜில்லா’ படத்தின்  தெலுங்கு பதிப்பை சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். […]

Continue Reading