அப்பா பட தலைப்பில் வெளியான மகனின் ஃபர்ஸ்ட் லுக்!!!!

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படமான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் லுக் வீடியோ நேற்று ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஜூலை 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. இந்த போஸ்டர் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள காட்சியை நினைவூட்டுவது போல் அமைந்திருப்பதாக சூர்யா ரசிகர்கள் சமூக […]

Continue Reading

“இன்மை”குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது…

இன்மை” உங்களை ஆச்சர்யப்படுத்தும் – நடிகர் சித்தார்த் ! இன்மை என்ற சொல்லின் பொருள் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதை குறிக்கும். நவரசா திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள “இன்மை” படத்தை, இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் உருவாக்கியுள்ளார். Netflix ல் வரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, நவரசாவின் ஒரு பகுதியாக உருவாகியுள்ள “இன்மை” படத்தில், தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்கள் மூலம் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த், தனது […]

Continue Reading

அரவிந்த் சுவாமியுடன் பணிபுரிந்தது, அற்புத அனுபவம் – நடிகை ரித்விகா !

தென்னிந்திய நடிகையும், பிக் பாஸ் வெற்றியாளருமான நடிகை ரித்விகா, Netflix நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி படமான ‘நவராசா’ படத்தில், பிரபல நடிகரும், அறிமுக இயக்குநருமான அரவிந்த் சுவாமியுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அற்புதமான அனுபவம் என்று கூறியுள்ளார். “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், இந்திய தொன்மை விதிகளாக கூறப்படும், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறுஅழகான கதைகளை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாக, […]

Continue Reading

ஓடிடி தளத்தில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரம் ‘ஒற்றைப் பனைமரம்’

விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரம்   ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’. இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 […]

Continue Reading

“விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்

நடிகர்  கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்டமாக உருவாகும்   “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், பாலிவுட் நாயகி ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் ஒப்பந்தமாகியுள்ளார் ! நடிகர்  கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும், “விக்ராந்த் ரோணா” திரைப்படம் பற்றிய ஒவ்வொரு செய்தியும், மிகப்பெரும் ஆச்சர்யங்களையும், பெரும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த  நிலையில், தற்போது ரசிகர்களின்  கனவு நாயகி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ்  “விக்ராந்த் ரோணா” படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மிக சமீபத்தில், […]

Continue Reading

அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’

வைட் கார்பெட் பிலிம்ஸ் சார்பாக K.விஜய் பாண்டி தயாரிப்பில்அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகி வரும் ‘தேஜாவு’ தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது ‘தேஜாவு’ (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  […]

Continue Reading

பா. ரஞ்சித்தின் அடுத்தப்படம் ஒரு காதல் கதையா?

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். “மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது. அதன் பின்னர் நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் […]

Continue Reading

RAPO19 படத்தில் இணைகிறார் நடிகர் ஆதி பினிஷெட்டி !

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் RAPO19 படத்தில் இணைகிறார் நடிகர் ஆதி பினிஷெட்டி !   தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ், ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகும் படம் பெயரிடபடாத இப்படத்திற்கு RAPO19 என்றழைக்கப்படுகிறது. இப்படத்தினை முன்னணி இயக்குநர் என்.லிங்குசாமி இயக்குகிறார்.‘RAPO19’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ல் துவங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

Continue Reading

“காசே தான் கடவுளடா”  படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது !

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில்,  இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில்  உருவாகும் கிளாசிக் காமெடி படமான,   “காசே தான் கடவுளடா”  படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது ! இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு, இன்று ( 2021 ஜூலை 16) திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா […]

Continue Reading

“விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்!!!!!

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.இந்நிலையில் படத்தின் டெஸ்ட் சூட்டை லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக […]

Continue Reading