நடிகர் பிரஷாந்த் இன்று பத்திரிகையாளர் மத்தியில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் .

ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை ஏதாவது ஓர் அடையாளத்துடன் கொண்டாடுவது பிரஷாந்தின் வழக்கம்.இந்த ஆண்டு சென்னை தி.நகர் பிரஷாந்த் கோல்டு டவரில் நடந்த விழாவில்  பத்திரிகையாளர்கள் மத்தியில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.   இந்த விழாவில் பெப்ஸியின் தலைவரும் அண்மையில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றவருமான இயக்குநர் ஆர். கே. செல்வமணி ,இயக்குநர் ஏ.வெங்கடேஷ்,தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் இசையமைப்பாளருமான தினா ஆகியோர் கலந்து கொண்டு பிரஷாந்தை […]

Continue Reading

‘வாய்தா’ பட ஆடியோ வெளியீடு

புதுமுகங்கள் நடிப்பில் தயாரான ‘வாய்தா’ படத்தின் ஆடியோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி மகேந்திரன் வெளியிட்டார். வராஹ ஸ்வாமி ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. வினோத்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ஓம் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான சி. மகேந்திரன் அவர்களின் புதல்வன் புகழ் மகேந்திரன் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக […]

Continue Reading

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்

லைகா புரொடக்‌ஷன்ஸ் – சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்” இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், […]

Continue Reading

ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கை, போராட்டமாக மாறும் படமே #ரெஜினா – தயாரிப்பாளர் – இசையமைப்பாளர் சதீஷ் நாயர் !

ரெஜினா படத்தின் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான சதீஷ் நாயர்  பேசியதாவது..    நான் ஒரு தொழிலதிபர். திரைப்படம் என்பது என்னுடைய புது முயற்சி. ஒன்றரை வருடத்திற்கு முன்பு எஸ்என் ( SN youtube ) என்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து சுயாதீனப் பாடல்களைப் பதிவேற்றி வந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.   எனது நண்பரும், இப்படத்தின் இயக்குனருமான டோமின் டி சில்வா இப்படத்தின் கதையை எனக்கு கூறினார். அப்போது தான் இந்த புதிய முயற்சியில் இறங்கலாம் என்று […]

Continue Reading

விஜய் பிரகாஷ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ‘உலகம்மை’, திருநெல்வேலியை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான வாழ்வியல் திரைப்படம்

‘சாதி சனம்’, ‘காதல் F.M.புகழ் இயக்குநர் விஜய் பிரகாஷ், தமிழ் எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் பிரபலமான நாவலான ‘ஒரு கோட்டுக்கு வெளியே’-வை அடிப்படையாகக் கொண்டு ‘உலகம்மை’ திரைப்படம் மூலம் தனது தடத்தை ஆழமாக பதிக்கவுள்ளார். மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி பேனரில் டாக்டர் வீ .ஜெயப்பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.   நெல்லை மாவட்ட பின்னணியில் 1970-களில் கதை நடக்கிறது. ’96’ புகழ் கவுரி கிஷன் மற்றும் வெற்றி மித்ரன் முன்னணி வேடங்களில் நடித்துள்ள ‘உலகம்மை’ படத்திற்கு இசைஞானி […]

Continue Reading

‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பற்காக கிராமி விருதை வென்றுள்ளது ஸ்டீவர்ட் கோப்லாண்ட், ரிக்கி கேஜ் மற்றும் Lahari Music கூட்டணி.

இந்திய இசையமைப்பாளரும் கிராமி வெற்றியாளருமான ரிக்கி கேஜ் மற்றும் ராக்-லெஜண்ட் ஸ்டீவர்ட் கோப்லாண்ட் (தி போலீஸ்) ஆகியோர் 64வது வருடாந்திர கிராமி விருதுகளில், அவர்களின் சமீபத்திய ஆல்பமான ‘டிவைன் டைட்ஸ்’ ஆல்பத்திற்காக கிராமி விருதை வென்றுள்ளனர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய லேபிள் Lahari Music இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளது. விருது வழங்கும் விழா  நேற்று இரவு லாஸ் வேகாஸில் நடைபெற்றது, அங்கு ரிக்கி கெஜ் மற்றும் ஸ்டீவர்ட் கோப்லேண்ட் ஆகியோர் டிவைன் டைட்ஸிற்காக, சிறந்த நியூ ஏஜ் ஆல்பத்திற்கான […]

Continue Reading

“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5 !

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன்  பல ஒரிஜினல்  தொடர்கள்  வரவுள்ளது ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன் ,  கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், […]

Continue Reading

‘ஓ சொல்றியா மாமா..’ வெற்றியை தொடர்ந்து ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்..

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.  ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் […]

Continue Reading

ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த நடிப்பில் P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இயக்கும், “தீர்க்கதரிசி”

    படத்திற்கு படம் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பலரின் பாராட்டை பெற்றவர் நடிகர் அஜ்மல். தற்போது ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார். “தீர்க்கதரிசி” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர். நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த், “மத்திய சென்னை”, “காட்டு பய சார் இந்த காளி” படங்களின் மூலம் […]

Continue Reading

நடிகர் சரண்ராஜ் இரண்டாவது மகன், தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ், நாயாகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பத்திரத்திலும் தனி முத்திரை பதித்து,  தனக்கென மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார். பைலட்டாக இருந்து, கோவிட் காலத்தில் பணியினை விட்டு, நடிப்பு […]

Continue Reading