விக்ரம் ரிலீஸுக்கு முன்னால் கமல்-ரஜினி சந்திப்பு! – கூட சென்ற லோகேஷ்!

கமல்ஹாசன்  நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர்  நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன்  நடித்துள்ள படம் விக்ரம். ஜூன் 3ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில்  சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியானது. இன்று முதல் படத்திற்கான டிக்கெட்  முன்பதிவு தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர்  கமல்ஹாசன் மற்றும் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும்  நடிகர் ரஜினிகாந்தை […]

Continue Reading

விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் !

நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்‌சன் த்ரில்லர் படமான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். 90 வினாடிகள் கொண்ட இந்த டீசர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயக்குநர் நவீன் M உடைய  ஸ்டைலிஷான உருவாக்கம், குறிப்பாக விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் அதிரடியான திரை தோற்றம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது. […]

Continue Reading

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் & இசை வெளியீட்டு விழா

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் (29-05-2022) அன்று நடைபெறவுள்ள விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி பான் இந்திய நடிகைகள் பங்கேற்பு தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். ‘தி லெஜன்ட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் […]

Continue Reading

ஜீ5 தளத்தில் உலகமெங்கும், பிரமாண்ட வரவேற்பில், இந்தியாவின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்!

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் – ஜூனியர் என்டிஆர் & ராம் சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”,  திரைப்படம் மே 20, 2022 முதல் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து  (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது, நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின்  மீது […]

Continue Reading

நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த சேத்துமான் பாராட்டப்படுவது உற்சாகத்தை தருகிறது. பா.இரஞ்சித்.

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் தான் பேசும் போது, தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மிக்க நன்றி. சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா..? […]

Continue Reading

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக நடிகர் ஆர்கேவின் புதிய விளம்பர உத்தி

எல்லாம் அவன் செயல் படம் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக,  தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே.. ஒருபக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 21 வருடங்களாக வெற்றிகரமான பிசினஸ்மேனாக வலம்வரும் ஆர்கே தனது புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை கடந்த சில வருடங்களுக்கு முன் மார்க்கெட்டில் கொண்டுவந்தார்.. இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை இந்தியா மட்டுமல்லாது […]

Continue Reading

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படங்களுக்கு ஒடிடியில் நல்ல வரவேற்பு இருக்கிறது – ’கிரிமினல்’ பட விழாவில் தனஞ்செயன் பேச்சு

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பத்திவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். பவன் கவுடா படத்தொகுப்பு செய்ய, சசி துரை நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். அஷ்வத் மற்றும் சரவணன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகின்றனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் […]

Continue Reading

தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை ( ஜூன் 22) முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள்

22 .5 .2022 அன்று புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில்  பல்வேறு இடங்களில் 9 புதிய மக்கள் இயக்க பெயற்பலகையை அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் திறந்துவைத்து ஏழை எளிய மக்களுக்கு கீழ்கண்ட நலத்திட்டுதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு புதுச்சேரி மாநில செயலாளர் திரு. G.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். முதற்கட்டமாக : புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் திரு. வசந்த் அவர்களின் மேற்பார்வையில்  திரு.செல்வா மற்றும் […]

Continue Reading

நடிகர் துல்கர் சல்மான், ஹனு ராகவாபுடி கூட்டணியில், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், “சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால்  மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” படத்தில் இளமை நாயகன் துல்கர் சல்மான் நடிக்கிறார், அழகு தேவதை மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க, மிகவும் சிறப்பு வாய்ந்த பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். காதல் கதைகளை மயக்கும் விதத்தில் சித்தரிப்பதில் பெயர் பெற்ற ஹனு ராகவாபுடி இப்படத்தை இயக்குகிறார், ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் இப்படத்தை  தயாரிக்கிறார். படத்தின் முன்னோட்டம் மூலம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, […]

Continue Reading

பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்: சோனியா அகர்வால் பேச்சு!

பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கிராண்மா’ . இப்படத்தை ஷிஜின்லால் எஸ். எஸ். இயக்கியுள்ளார். யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார்.ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ளனர். ‘கிராண்மா’ படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பு  நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷிஜின்லால்  எஸ்.எஸ்.,  தயாரிப்பாளர் ஜெயராஜ் ஆர், படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள நடிகை சோனியா அகர்வால், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள […]

Continue Reading