கார்மேனி செல்வம் -திரை விமர்சனம் 

cinema news movie review

கார்மேனி செல்வம் -திரை விமர்சனம் 

நடிகர்கள் :சமுத்திரக்கனி,கௌதம் வாசுதேவ் மேனன் ,  லக்ஷ்மி பிரியா,அபிநயா, கரன் சக்கரவர்த்தி , மற்றும் பலர்.

இசை:ராமானுஜம்,

ஒளிப்பதிவு :யுவராஜ்  தக்ஷனின்,

இயக்கம்: ராம் சக்ரி,

தயாரிப்பு: அருண் ரங்கராஜுலு.

இன்றைய சூழ்நிலையில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தேவைக்கு ஏற்ப ஆசையே  அடைய கடன் வாங்கி அதில் இருக்கும்  சிக்கலும் பிரச்சினைகளும்  இருந்து மீள முடியாமல் தவிக்கும் எவ்வாறு என்னவென்று  சொல்லப்படும் படம் தான் கார் மேனி செல்வம்.

சமுத்திரக்கனி அவர் திறமைக்கு எந்த  கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை நம் கண் முன் நிறுத்துவார்  அதற்குப் பொருத்தமாகவும் இயல்பாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்துவார், அவரது மனைவியாக லட்சுமி பிரியா இவரது நடிப்பும் மிகச் சிறப்பாக உள்ளது  அதுவும் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத் தலைவியின் பொறுப்பையும் தன் வலியும் மிக ஆழமாக நடிப்பில் மூலம்  செய்துள்ளார்,

கதைக்கு துணை  கதாபாத்திரங்களாக வரும் கௌதம் மேனன், அபிநயா மற்றும் மற்ற நடிகர்கள் கதையின் ஓட்டத்தை சீராக முன்னேற்ற உதவுகிறார்கள்.

இசை ராமானுஜம் கையாண்ட விதமும் இத் திரைகதைக்கு  எவ்வளவு பொருத்தமாக இருக்குமோ அவ்வளவு கச்சிதமாக பணியை செய்துள்ளார்.

ஒளிப்பதிவு  யுவராஜ்  தக்ஷனின் காட்சிக்கு காட்சி அழகாக வடிவமைத்து உள்ளார்.

இயக்குனர் ராம் சக்ரி, “கடன் என்பது தேவைக்கான கருவி; ஆடம்பரத்திற்கான சிக்கல் அல்ல” என்ற கருத்தை மையமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறார். மேலும், குடும்ப பொறுப்புகளுக்காக வெளிநாட்டில் வேலை செய்யும் மனிதர்களின் மனநிலையையும் உணர்ச்சிப்பூர்வமாக தொட்டுச் செல்கிறார்.

சொல்ல வந்த கருத்து மிகவும் நல்ல கருத்தாக இருந்தாலும் படத்தில் சில இடங்களில் நீளத்தை குறைத்து இருந்தால் மிக சிறப்பாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில் கார் மேனி செல்வம் நம் வாழ்க்கையை ஆசை என்ற ஒரு கருவி கடனாக மாறி நம் வாழ்க்கையை சிதைக்கிறது  நம்மால் உணர முடியும்.