படப்பிடிப்பு இடைவேளையில் புத்தக வெளியீடு

News

2005-ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்டகோழி’.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடைபெற்று வந்த படப்பிடிப்பின் இடைவேளையின் போது, இயக்குநரும், வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதியின் கவிதை நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற பிருந்தா சாரதியின் ஹைகூ கவிதை நூலை, நடிகர் விஷால் வெளியிட இயக்குநர் லிங்குசாமி பெற்றுக்கொண்டார். இந்நூலை தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடாக டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் கவிஞர்கள் பிறைசூடன், அறிவுமதி, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்