வி.கே புரடக்க்ஷன் குழுமம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. தமிழர்களின் தொன்மைமிக்க வீரம், அறம், ஈரத்தை சொல்வதோடு பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களை திரைப்படத்தோடு தொடர்பு படுத்தி கொள்ள செய்யும் வகையில் அனைத்து தரப்பினரையும் கவரும் மண்ணதிரும் ஒரு மாபெரும் வெற்றிப்படைப்பாக இத்திரைப்படம் இருக்கும் என இயக்குநர் வ.கெளதமன் உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “கதை கேட்ட கணத்திலேயே இசைப் பொறுப்பேற்ற ஜிவி பிரகாஷ் அவர்களுக்கும், “உனக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே இப்படைப்பு ஒரு தலைநிமிர்வு” என்று வாழ்த்தியதோடு “புலிக்கொடி எங்கக் கொடி – நாங்கஎனத் தொடங்கும் பாடலை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அடித்து ஆடிப்பாடும் பாடலாக எழுதித்தந்து எனது அனைத்துப் படைப்புகளுக்கும் தோளோடு தோள் நிற்கும் “கவிப்பேரரசு” வைரமுத்து அவர்களுக்கும் நெகிழ்ந்த நன்றிகள்,” என்றார்.
“மாவீரா” திரைப்படத்தின் ஒளிப்பதிவை வெற்றிவேல் மகேந்திரன் கையாள்கிறார். வசனங்களை பாலமுரளி வர்மன் தீட்ட, கலை இயக்கத்தை மாயப்பாண்டியும், சண்டைப் பயிற்சியை “ஸ்டண்ட்” சில்வாவும், படத்தொகுப்பை ராஜாமுகமதுவும், மக்கள் தொடர்பை நிகில் முருகனும் கவனிக்கிறார்கள்.

