இரட்டை வேடத்தில் தனுஷ் .. அசுரன் அப்டேட்!

News

வட சென்னை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் தனுஷ் மீண்டும்
புதிய படத்திற்காக கைகோர்த்துள்ளனர். ’அசுரன்’ என டைட்டில் வைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

கோவில்பட்டி, தென்காசி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு அடுத்ததாக விருதுநகரில் நடைபெறவிருக்கிறது.

 

இந்த படத்தில் தனுஷின் மனைவியாக கேரள திரையுலகை சேர்ந்த மஞ்சு வாரியர் நடிக்கவிருக்கிறார்.

 

இந்நிலையில், தனுஷ் இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கோடம்பாக்கத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன. கொடி படத்திற்கு பிறகு தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கும் இரண்டாவது படமாக இது அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.