அனலி  திரைவிமர்சனம்

cinema news movie review

அனலி  திரைவிமர்சனம் 

நடிகர்கள்: சிந்தியாலூர்டே,ஷிமாலி(குழந்தை),சக்தி வாசு தேவன்,கபீர் துகான் சிங்,அபிஷேக் வினோத், இனியா,குமரவேல்,மற்றும் பலர்.

இசை:தீபன் சக்ரவத்தி,

ஒளிப்பதிவு:ராமலிங்கம்,

இயக்கம்:தினேஷ் தீனா

தயாரிப்பு:சிந்தியா லூர்டே,

அனலி திரைப்படத்தின் தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிந்தியா லூர்டே தனது குழந்தையுடன் சென்னை வருகிறார், எதிர்பாராத விதமாக தான் கொண்டு வரும் ஒரு பேகை தொலைத்து விடுகிறார்கள், அது ஒரு கடத்தல் கும்பல் கண்டெய்னர் லாரியில் சிக்கிக் கொள்கிறது அதை தேடி செல்கிறார்கள் அதில் ஏற்படும் சிக்கல்கள் இன்னல்கள் எவ்வாறு கையாண்டு அந்த பேகை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் கதை.

சிந்துயா லூர்டே தனது நடிப்பின் மூலம் திறமையே வெளிப்படுத்தி உள்ளார், குறிப்பாக சண்டை காட்சில் மிகவும் சிரமம் பட்டு அதிக உழைத்து இருக்கியார் என்று சொன்னால் மிகை ஆகாது.சண்டை காட்சில் வீரமம் ஆக்ரோஷமும் மறுபுறம் குழந்தையின் மீது உள்ள தாய் பாசமும்  கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார்.

வில்லனாக நடித்திருக்கும் நடிகர்களின் பங்கு கதையின் மீதி பலம். சிந்தியாக்கு உதவும் போலீஸ் கதாபாத்திரத்தில் வரும் குமரவேல் பெரும் பங்கு தான் சொல்லவேண்டும்.

தீபன் சக்ரவர்த்தி பின்னணி இசை நம்மை ஈர்க்கிறது,ஆனால் பாடல் சற்று சுமார் தான்.

ராமலிங்கம் ஒளிப்பதிவு காட்சிகள் அற்புதம்.

ஆக்ஷன் படம் என்பது அவ்வளவு எளிதாக இயக்கா முடியாது, ஆனால் இயக்குனர் தினேஷ் தீனா அதை மிகவும் சிறப்பாக செய்துள்ளார் தன் திறமையாள் ஒரு அனுபவமான இயக்குனர் போல் அசதியுள்ளார்.

மொத்தத்தில் அனலி கடின உழைப்பக்கு நல்ல பாராட்டு.