”பிரேமம்” இயக்குனரின் அடுத்த தமிழ்ப்படம்!

News

தமிழில் “நேரம்”, மலையாளத்தில் “பிரேமம்” ஆகிய படங்களை இயக்கியவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். அடுத்தடுத்து நல்ல படங்களை இயக்கி எதிர்பார்ப்பிற்குறிய இயக்குனராக மாறிய இவர், தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் ஜயராமின் மகன் காளிதாஸை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும், அதே படத்தில் தனது நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமாகிய சித்தார்த்தும் முக்கியமான கதபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் அல்ஃபோன்ஸ் புத்திரன்
தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெறிவிக்கையில், ”இந்த படத்தை முழுக்க முழுக்க இசை சம்பந்தப்பட்ட வகையில் கதை அமைத்திருக்கிறேன். அதற்காகவே இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த படம் நகைச்சுவை, காதல் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான சாதாரண படமாக இருக்கும். ஆனால் `நேரம்’, `பிரேமம்’ போன்று கண்டிப்பாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தில் நிவின் பாலி நடிக்கவில்லை. ஆனால் நிவினுடன் மீண்டும் இணைவேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாகவும்.. காளிதாஸ், சித்தார்த் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு ரெஜேஷ் முருகேஷன் இசையமைக்கிறார்.