காதல் திருமணம் செய்யும் அதர்வா

News Speical

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவரது தம்பியும் முரளியின் இளைய மகனுமான ஆகாஷுக்கும் விஜய்யின் உறவினரும், ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சிநேகாவுக்கும் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அதர்வா கோவாவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. குடும்பத்தினர் சம்மதத்துக்காக காத்திருந்த அதர்வா அது கிடைத்துவிட்டதால் திருமணத்துக்கு தயாராகி விட்டார் என்கிறார்கள்.