நடிகை ரூபிணியின் தாயார் காலமானார்

News

1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரூபிணி. இவரின் தாயார் இன்று மும்பையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விஜயகாந்தின் ‘கூலிக்காரன்’, ‘ ரஜினியின் ‘மனிதன்’, கமல்ஹாசனுடன் ‘மைக்கல் மதன காமராஜன்’ என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியகாக ரூபிணி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக ‘தாமரை’ என்ற தமிழ்ப் படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார்.