அக்யூஸ்ட் திரைவிமர்சனம்

cinema news movie review

அக்யூஸ்ட்   திரைவிமர்சனம்

நடிகர்கள்:உதயா,அஜ்மல், யோகி பாபு

இசை: நரேன் பாலகுமார்,

இயக்குநர் :பிரபு ஸ்ரீனிவாஸ்,

 

இந்த வாரம் தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்துடன் திரைக்கு வந்துள்ளது “அக்யூஸ்ட்”. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ் கமர்ஷியல் பாணியில் சில பரிசோதனைகளை முயன்றிருக்கும் இந்தத் திரைப்படம்

 

எம்.எல்.ஏ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கைதி உதயா, புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அவரை அழைத்துச் செல்லும் போலீசார், சிக்கல்களில் சிக்கி அரசு பேருந்தில் பயணிக்க நேரிடுகிறது. அதற்கிடையில், உதயாவை அழிக்க திட்டமிடும் குழுவும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மறைமுக முயற்சிகளும் கதையை பரபரப்பாக நகர்த்துகின்றன. இந்நிலையில், அஜ்மல் என்பவர் போலிஸ் கான்ஸ்டபிளாக உதயாவைக் காக்க முனைகிறார். அவரால் உதயாவை பாதுகாக்க முடியுமா என்பதே கதையின் மையம்.

உதயா, ரவுடி தோற்றத்துடன் நடித்தாலும், காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் பசுமை மாறாத நடிப்பை காட்டி பாராட்டுக்கு உரியவையாகிறார்.

அஜ்மல் – எளிமையான காவலராக வலம் வருகிற அவரின் துணிவும் நேர்த்தியும் ரசிகர்களை ஈர்க்கும்.

ஜான்விகா காளக்கேரி, அழுத்தமில்லாத கேரக்டரிலும், நடிப்பிலும், நடனத்திலும் நன்றாகச் செய்துள்ளார்.

யோகி பாபு, அவரது நகைச்சுவை சேய்திகளால் சிரிப்பும், சினிமாவுக்கும் பக்கபலமாக உள்ளார்.

மற்ற கேரக்டர்களில் பவன், சுபத்ரா, ஸ்ரீதர், தீபா பாஸ்கர் உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை சரிவரச் செய்துள்ளனர்.

இசை: நரேன் பாலகுமாரின் இசை – பாடல்களிலும், பின்னணி இசையிலும் கதையின் உணர்வுகளை ஏற்றத் தூக்குகிறது.

படத்தொகுப்பு: கே.எல். பிரவின் – சுருக்கமாகவும் கமர்ஷியல் ஓட்டத்தில் கதை ஓடும்படி தொகுத்துள்ளார்.

பழைய மாதிரியான ஃபார்முலா இருந்தாலும், கதையின் சுழற்சி, சில கதாபாத்திரங்களின் நுட்பமான நடிப்புகள் காரணமாக, “அக்யூஸ்ட்” ஒரு முறை பார்க்க தகுதியான கமர்ஷியல் முயற்சி.