சிட்டுக்குறிஞ்சி – திரைவிமர்சனம்

cinema news movie review

சிட்டுக்குறிஞ்சி – திரைவிமர்சனம்

நடிகர்கள் :ரஜித் மேனன்,ஸ்ரீராம் கார்த்திக்,தீபிஷிகா,நக்ஷா சரண்,ஜி.எம். குமார், தேனி முருகன், கராத்தே ராஜா, மஞ்சு,மற்றும் பலர்.

இசை :மாரா,

ஒளிப்பதிவு :பிரான்சிஸ் ராஜ்குமார். A

இயக்கம் :V. J மீனாட்சி சுந்தரம்,

தயாரிப்பு :D. ஜூட் ஆனந்த்.

கதாநாயகன் ரஜித் மேனன் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காடுகளைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கு வருகிறார்  அங்கு வனத்துறை அதிகாரியின் வீட்டில் தங்கு வைக்கும் படி ஒரு பால்காரிடம்  சாவி கொடுத்து அனுப்புகிறார்கள் அவரும்  சாவிய தொலைத்து விடுகிறார்  அந்த அடர்ந்த காட்டுக்குள் ஒரு வீட்டுக்குள் தங்க வைக்க அவரை முடிவு செய்து விடுகிறார் அங்க தனியாக ஒரு பெண் மட்டும் வசித்து வருகிறார்  அந்தப் பெண்ணும் இவரிடம் நன்றாக அக்கறையாக கவனித்து வருகிறார் இதனால் ரஞ்சித் மேனன் அந்த பெண்ணிடம் காதல் கொள்கிறார் சற்றும் எதிர்பாராமல் அந்த பெண்ணும் கண்ணீர் விட்டு அழுது விடுகிறார் இதனால் அங்கிருந்து   சென்று விட்டு தனது ஊருக்கு திரும்ப செல்ல முயற்சிக்கிறார்.

சில காலங்களுக்குப் பிறகு தனது நண்பருடன் மீண்டும் அதே காட்டுப்பகுதிக்கு வரும் ரஜித் மேனன், தீப்சிகாவைச் சந்திக்கிறார். ஆனால், அவரைத் தீப்சிகாவுக்கு அடையாளமே தெரியவில்லை. மேலும், முன்பு தங்கியிருந்த வீட்டைத் தேடிச் செல்லும் அவருக்கு அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த வீடு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து பாழடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு குழம்பிப் போகிறார். அப்படியானால், கடந்த முறை அவர் சந்தித்த தீப்சிகா யார்? அந்த வீட்டின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதற்கான விடைகள்தான் படத்தின் மீதிக்கதை.

ரஜித் மேனனின் இரண்டு காலகட்ட நபராக நடித்திருக்கும் நடிப்பு கச்சதமாக செய்திருக்கிறார் அமைதியான இயல்பான நடிப்பை தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார், மிகச் சிறப்பு.

தீப்சிகா ஏற்று நடித்திருக்கும் மாறுபட்ட கதாபாத்திரங்கள் ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாக அவரே திகழ்கிறார். துடிப்பான நடிப்பும், அழகான சிரிப்பும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகபாவனைகளும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அவருடைய நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று.

ஜி.எம். குமார், தேனி முருகன், கராத்தே ராஜா, மஞ்சு உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பங்களிப்பும் கதையின் ஓட்டத்திற்கு வலு சேர்க்கிறது.

இசை கதைக்கு ஏற்ப மிக நன்றாகவே அமைந்துள்ளது பின்னணி இசை நம்மை ரசிக்கவைக்கிறது.

ஒளிப்பதிவு மலைப்பகுதி காட்சிகள் அழகான காட்சிகள் இயற்கை காட்சிகள் நல்ல ரசனை.

இயக்குனர் மீனாட்சி சுந்தரம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு ஒரு பாராட்டு எத்தனையோ ஆணவக் கொலைகள் நம் படமாக்கப்பட்டாலும் நம் ஊரில் இன்னும் ஒரு விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறது அதனை மர்மம், காதல், ஆன்மாக்கள் என முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை உத்தியுடன் அணுகியிருப்பது பாராட்டுக்குரியது.

மொத்தத்தில் இந்த சிட்டுக்குறிஞ்சி ஆன்மாவின்  உன்னதமான காதல்.