ஒன்ஸ் மோர் திரை விமர்சனம்
நடிகர்கள் : அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், மற்றும் பலர்.
இசை : ஹேஷாம் அப்துல்,
ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன்,
இயக்கம் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்,
தயாரிப்பு : மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ்.

கதாநாயகன் அர்ஜுன் தாஸ் (ரகுவரன்) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் உயிரோட்டமற்ற மனிதராக அறிமுகமாகும் ரகு, மனநல மருத்துவர் மற்றும் பாதிரியாரை சந்தித்துக்கொண்டிருப்பது, அவரது மனநிலையைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. அவரது கல்லூரி கால கட்டத்தில் காதல் தோல்வியால் இந்த நிலைமைக்கு அவர் ஆளாக்கப்பட்டார்.ஆனால், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறது. , பல இடங்களில் தடு மாற்றம்.
அதற்கு பிறகுஅதிதி சங்கர் சந்திக்கிறார் ஒரு தலை காதலாக அதிதி சங்கர் கதாநாயகனை அர்ஜுன் தாசை காதலித்து வருகிறார், வாழ்க்கைக்குள் அவர் நுழைந்த பிறகு படம் கொஞ்சம் உயிர் பெறுகிறது. தன்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றக்கூடியவர் என்ற எண்ணத்துடன் செயல்படும் அஞ்சலியின் கதாபாத்திரம், சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது எதிர்பாராத நேரத்தில் கல்லூரி காதலியை திரும்ப சந்திக்க நேரிடுகிறது பிறகு இவர் யாரை திருமணம் செய்து கொண்டாரா காதலை திரும்ப ஏற்றுக் கொண்டாரா என்பது தான் மீதி கதை .
அர்ஜுன் தாஸ் இப்படத்தில் தனது நடிப்பில் நல்ல மாற்றத்தை காட்டியிருக்கிறார். கோபம், விரக்தி, மனச்சோர்வு, காதல் என ரகுவின் வெவ்வேறு மனநிலைகளை தன்னுடைய உடல்மொழி மற்றும் முகபாவனைகளால் நன்றாக வெளிப்படுத்துகிறார். குறிப்பாக இறுக்கமான மனிதராக இருக்கும் ரகுவுக்கும், காதலில் விழுந்த பிறகு மாறும் ரகுவுக்கும் இடையிலான வித்தியாசத்தை அவர் நம்பும்படியாக நடித்திருக்கிறார்.
அதிதி சங்கர் இவரின் பெரும்பங்கு என்றே சொல்லலாம் இந்த படத்தில் பலம் சேர்க்கிறார் அவர் வரும் காட்சிகளில் எல்லாம் நம்மை ரசிக்க வைக்கிறார். சோனா ஒலிக்கள் கல்லூரி காதலியா வருவது அழகு ஒரு கேரளா பெண்ணாக நம் மனதில் இடம் பிடிக்கிறார், ஆனால் சற்று இவர் கதாபாத்திரத்தில் கவனம் செலுத்திருக்கலாம்.
ஹேஷமின் இசையும் பின்னணி இசையும் படத்தின் உணர்வுகளை தூக்கிப்பிடிக்க உதவுகின்றன. குறிப்பாக காதல் காட்சிகளில் இசை படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.
படத்தின் ஒளிப்பதிவில் கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்க முயற்சி செய்திருப்பது பாராட்டுக்குரியது. அஞ்சலியின் உலகம் வண்ணமயமாகவும், ரகுவின் உலகம் இறுக்கமானதாகவும் காட்டப்படுகிறது.
இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் படத்தின் மூலம் சொல்ல வந்ததை அவர் முழுமையாக சொல்லி இருப்பாரா என்றால் சந்தேகம் தான் திரைக்கதையில் சில இடங்களில் அவர் தவறவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மெதுவாக நகரும் காட்சிகள் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்,இன்னும் கவனம் செலுத்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ஒன்ஸ்மோர் ஒரு முறை மட்டும் பார்க்கலாம்.
