ஹாய் திரைவிமர்சனம்
நடிகர்கள் : கவின், நயன்தாரா, பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, பெப்சி விஜயன், விடிவி.கணேஷ், மற்றும் பலர்.
இசை : ஜென் மாட்டேன்,
ஒளிப்பதிவு : ராஜேஷ் சுக்லா,
இயக்கம் : விஷ்ணு எடவன்,
தயாரிப்பு : எஸ் எஸ் லலித்குமார் விஷ்ணு நயன்தாரா, உமேஷ் குமார் பன்சால்.

கதாநாயகனுக்கு (கவின்) ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கனவோடு பெற்றோர்கள் படத்தின் ஆரம்பிக்கிறது, கோயம்புத்தூரில் ஒரு பெரிய குடும்பத்தில் செல்ல பிள்ளையாகவும் அப்பாவியாகவும் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன், அவருக்கு பல இடங்களில் திருமணம் செய்து வைக்க பெண்ணை தேடி பார்க்கிறார்கள் அவரை எந்த ஒரு பெண்ணுக்கும் பிடிக்காமல் போய்விடுகிறது இதனால் அவர் மனம் உடைந்து தன் ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்து விடுவார் நான் எப்படியாவது எனக்கு புடிச்சமான ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு தான் ஊர் திரும்பி வருவேன் என்று ஒரு கடிதம் எழுத வைத்து செல்கிறார், மறுப்புறம் கதாநாயகியும் (நயன்தாரா) அவருக்கு விருப்பம் இல்லாமல் ஒரு திருமணம் ஏற்பாடு நடக்கிறது அந்த திருமணத்தைப் பிடிக்காமல் அவரும் தன் ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வந்து விடுகிறார் பிறகு இருவருக்கும் இடையே உருவாகும் நட்பு, கவினுக்கு மட்டும் காதலாக மாறுகிறது. நயன்தாராவோ கவினை நல்ல நண்பராக மட்டுமே பார்க்கிறார். இருவருக்கும் எப்படி காதல் வந்தது மிக சுவாரஸ்மான திரைக்கதை உடன் இறுதியில் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா? என்பது தான் மீதி கதை.

கவினுக்கு இப்படம் ஒரு சிறப்பான கம்பேக் என்று சொல்லலாம். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கும் அவர், காதல் காட்சிகளிலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
சில இடங்களில் முகபாவனைகளிலேயே நகைச்சுவையை உருவாக்கும் கவின், உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் தனது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார். ரசிகர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதும் படத்தின் பலம்.
நயன்தாரா, கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் உணர்வுகளை முன்னெடுத்துச் செல்லும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். கவினுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் காட்சிகளில் நட்பும், நகைச்சுவையும் இயல்பாக வெளிப்படுகின்றன.
தனக்கே உரிய திரை ஆளுமையுடன் கதாபாத்திரத்தை கையாண்டிருக்கும் நயன்தாரா, அனுபவம் வாய்ந்த நடிகையாக தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, குரேஷி, ஆதித்ய கதிர் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக பாக்யராஜின் அனுபவம், ராதிகாவின் இயல்பான நடிப்பு, பிரபுவின் கம்பீரமான திரை இருப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. குரேஷி, ஆதித்ய கதிர் உள்ளிட்டோரும் தங்கள் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்கள்.
VTV கணேஷ், ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், சத்யன், அம்ருதா சீனிவாசன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி என படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஜென் மார்ட்டினின் இசை படத்தின் உணர்வுகளுடன் இணைந்து பயணிக்கிறது. பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.
ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு அழகான திரை வடிவத்தை வழங்குகிறது. காதல் காட்சிகளிலும் நகர்ப்புறப் பின்னணியிலும் கேமரா அழகாக பயணிக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவனுக்கு ‘ஹாய்’ முக்கியமான அறிமுகப் படியாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் தனது வருகையை அழுத்தமாகப் பதிவு செய்யும் படமாகவும் அமைந்திருக்கிறது
மொத்தத்தில் இந்த ஹாய் குடும்பத்துடன் அனைவரும் சென்று ஹாய் சொல்லலாம் ஒரு அழகான குடும்ப காதல்.
