கட்டா குஸ்தி 2 திரைவிமர்சனம்
நடிகர்கள் :விஷ்ணு விஷால்,சாரா, ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காலி வெங்கட், முனீஸ் காந்த், ரம்யா கிருஷ்ணா,யோகி பாபு, மற்றும் பலர்.
இசை :ஷான் ரோல்டன்,
ஒளிப்பதிவு :K. M. பாஸ்கரன்,
இயக்கம்: செல்லா அய்யாவு ,
தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்,விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்.

கட்டா குஸ்தி 2 முதல் பாகத்தில் இருந்து கதை இங்கேயும் தொடங்கப்படுகிறது மல்யுத்த வீராங்கனியாக இருக்கும் மனைவிக்கு துணையாக இருக்கும் கணவன், மற்றும் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதே மைய கருத்து. கதையோ அனைவரும் அறியப்பட்ட ஒன்றுதான் ஆனால் முதல் பாகத்தில் கிடைத்த வெற்றியோ பல படங்களில் இரண்டாம் பாகத்தில் கிடைப்பது இல்லை அது போல் இருந்து விடுமோ என்று என அச்சம் எழும், நிச்சயம் அது போன்று முடிவு இருக்காது குடும்பத்துடன் ரசித்து சிரிப்புடன் குதூகலமாக கண்டு கழிக்க ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம்.
கதாநாயகன் விஷ்ணு விஷால் தனது ஹவுஸ் ஹஸ்பண்ட் என்னும் கதாபாத்திரத்தில் சிறந்த கணவராக தோன்றுகிறார் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தன் மனைவிக்கு துணையாக நிற்கிறார். திரை அரங்குகளில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் கணவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் பதிய வைக்கிறார்.
கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி ஒரு மல்யுத்த வீராங்கனியாக அவதாரம் எடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் மல்யுத்த சண்டை காட்சிகளில் அவர்களது கடின உழைப்பும் முயற்சியும் நன்றாகவே தெரிகிறது அது மட்டும் இல்லாமல் பெண் குழந்தை எப்படி வளர்க்க வேண்டும் என்று ஒரு பொறுப்புள்ள அம்மாவின் பாசமும் பொறுப்பையும் தன் நடிப்பால் வெளிப்படுத்தி உள்ளார்.

இவர்களுக்கு இணையாக பேபி சாரா தனியாகவே மதிப்பெண் பெற்று விடுகிறார் , மற்ற கதாபாத்திரங்களும் காலி வெங்கட், முனீஸ் காந்த், கருணாஸ், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகவே செய்து உள்ளார்கள், கௌரவத் தோற்றத்தில் தோன்றும் ரம்யா கிருஷ்ணாவும்,யோகி பாபு அவர்கள் பங்குக்கு பலம் கூட்டுகிறார்கள் ,
ஒளிப்பதிவு கிராமப்புறங்களின் இயற்கை அழகையும், மல்யுத்த அரங்குகளின் வீர உணர்வையும் கண்கவர் வகையில் பதிவு செய்துள்ளது. ஷான் ரோல்டனின் இசை கதையின் உணர்வுகளுக்கு அழகாக துணை நிற்கிறது. பாடல்கள் மனதில் நிற்கும் வகையிலும், பின்னணி இசை முக்கியமான காட்சிகளின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்தும் வகையிலும் அமைந்துள்ளது.
படத்தின் திரைக்கதையோ பெரிய பலம் கதை முழுக்க சிரிப்பு,காதல், உணர்வு , குடும்ப பாசம் பொறுப்பை உணர்த்தும் வகையாகவே அமைந்துள்ளது,இயக்குனர் செல்லா அய்யவு தன் படைப்பால் ரசிகர்களை ஏமாற்றம் இல்லாமல் நம்மை சிரிக்க வைக்க முயற்சியில் வெற்றி தான் .
மொத்தத்தில் இந்த கட்டா குஸ்தி 2 குடும்பத்துடன் மகிழ்ச்சியாக மன நிறைவாக பார்க்கப்பட வேண்டிய படம் தான்.

