அனந்தன் காடு திரைவிமர்சனம்
நடிகர்கள்: ஆர்யா, சுனில், ரெஜினா கசாண்ட்ரா,முரளி கோபி,போஸ் வெங்கட், இந்திரன்ஸ் , மற்றும் பலர்.
இசை :அஜனீஷ் லோக்நாத்,
ஒளிப்பதிவு :யுவா,
இயக்கம் :ஜியென் கிருஷ்ணகுமார்.

இலங்கையில் தன் இன மக்களுக்காக போராடும் ஒரு போராளியாக கதாநாயகன் ஆர்யா தோன்றுகிறார் இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தன் மக்களையும் குடும்பத்தினரும் இழக்கிறார், பின் தமிழ்நாட்டுக்கு தப்பிது வருகிறார் அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டை தோன்றுகிறது மறுபடியும் அவர் அங்கிருந்து கேரளாவுக்கு தலைமறைவாகிறார் அங்கே நான்கு பேர் சேர்ந்த ஒரு கூலிப்படையிடம் தஞ்சம் அடைகிறார் அம்மாநிலத்தின் முதல்வரும் போலீஸ் உயர் அதிகாரி இவர்களுக்கு ஒரு கூலிப்படையாக செயல் ஈடுபட்டு வருகிறார்கள் , ஒரு கட்டத்தில் முதல்வருக்கும் இந்த நான்கு பேருக்கும் இடையே எதிர்ப்பு கிளம்புகிறது இறுதியில் இவர்கள் நிலை என்ன இதற்கு இடையே ஆர்யா வந்த நோக்கம் என்ன என்பதுதான் மீதி கதை .
நாயகனாக ஆர்யா நடித்திருந்தாலும், இது முழுக்க முழுக்க ஒரே நபரின் படம் அல்ல. பல முக்கிய மலையாள நடிகர்கள் கதையின் மையப்புள்ளிகளாகத் தோன்றி படத்திற்கு வலுசேர்க்கிறார்கள். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஆர்யாவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் தீவிரம் மற்றும் உடல் மொழி ரசிகர்களை ஈர்க்கிறது.
போலீஸ் அதிகாரியாக வரும் சுனில் அவரது வில்லத்தனமான நடிப்பை நம்மையும் சேர்த்து மிரட்டுகிறது அவர்கள் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் படத்திற்கு மிக நிறைவாகவே அமைந்திருக்கிறது .
ரெஜினா கசாண்ட்ரா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். முரளி கோபி, அக்ஷய்குமார், தேவ்மோகன், இந்திரன்ஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
அஜனீஷ் லோக்நாத் பாடல்களைவிட பின்னணி இசையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறார். பல காட்சிகளின் பதற்றத்தையும் விறுவிறுப்பையும் அவரது இசை மேலும் உயர்த்துகிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பலம் என்று சொல்லலாம் அந்தப் போர் காட்சிகள் இரவில் எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் போராட்ட களம் இப்படித்தான் இருக்குமோ என்று நம்மை வியக்க வைக்கிறார் , மற்றும் இயற்கை காட்சிகளையும் அழகாக ரசிகம்படியாகவும் பதிவு செய்து இருக்கிறார் .
இயக்குனர் ஒரு உண்மையின் சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைகதையாக படைத்ததற்கு பாராட்டுக்குரியதாகும் சில இடங்களில் லாஜிக் இல்லாமல் போகிறது, நேரத்தின் அளவை குறைத்து இருக்கலாம் கதையில் விறுவிறுப்பும் காட்சிக்கு காட்சி நம் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது . நிச்சயமாக ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இருக்கும்.
மொத்தத்தில் அனந்தன் காடு இன மக்களின் வரலாறு.

