பைக்ர் திரை விமர்சனம்
நடிகர்கள்: ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், நிரூப், மாஸ்டர் சௌரியா, மற்றும் பலர்.
இசை: ஜிப்ரான் வைபோதா,
ஒளிப்பதிவு:J. யுவராஜ்,
இயக்கம் :அபிலாஷ் ரெட்டி,
தயாரிப்பு: வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலாபாட்டி.

தெலுங்கில் உருவாகி தமிழில் மொழி மாற்றம் செய்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள பைக்கர் திரைப்படம், ஒரு விளையாட்டு துறையில் மோட்டார் பைக் ரேசராக வெற்றி பதிவு செய்யப்பட வேண்டும் என்று ஆசையை மையமாக வைத்து அதனை சாதிக்க நினைக்கும். ஒரு இளைஞனின் வேகத்தையும் கனவுகளையும் உணர்வுகளும் வெளிப்படையாக சொல்ல வந்திருக்க படம் தான் இந்த பைக்கர்,
கதாநாயகன் தந்தை தன் மகனே(ஷர்வானந்த்)சிறு வயதில் இருந்தே ஒரு சிறந்த மோட்டார் பைக் ரேஸ்ராக்க வேண்டும் என்று தன் முழு திறமையால் சிறப்பு பயிற்சி அளித்து வருவார்,
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் அதன் இயல்பான உணர்ச்சி வெளிப்பாடு. தந்தை-மகன் உறவின் நுணுக்கங்கள், வெற்றியின் பின்னாலுள்ள வலி, தோல்வியின் மனஅழுத்தம் — அனைத்தும் நம்பிக்கைக்குரிய விதத்தில் சொல்லப்பட்டுள்ளன. சர்வானந்த் தனது கேரியரில் மிகவும் முதிர்ந்த நடிப்பை இங்கு வெளிப்படுத்துகிறார். உடல் மொழி முதல் கண் பார்வை வரை, ஒரு தொழில்முறை ரேசராக அவர் முழுமையாக மாறியிருப்பது தெளிவாக தெரிகிறது.
அதே நேரத்தில் டாக்டர் ராஜசேகர் தனது அனுபவத்தின் நிறைவாக அமைந்த ஒரு கம்பீரமான நடிப்பை அளிக்கிறார். அதிகம் பேசாமல், கண்களில் உணர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது நடிப்பு, படத்திற்கு ஒரு உயர்ந்த தரத்தை அளிக்கிறது. இருவருக்கும் இடையிலான காட்சிகள் படத்தின் இதயமாக திகழ்கின்றன.
மாளவிகா நாயர் நடித்துள்ள அனன்யா கதாபாத்திரம், கதைக்கு தேவையான மென்மையான சமநிலையை வழங்குகிறது. காதல் கோடு மிகைப்படுத்தப்படாமல், கதையின் ஓட்டத்துக்கு ஏற்றவாறு இயல்பாக இணைக்கப்பட்டுள்ளது.
இசை ஜிப்ரான் வைபோதா அவர் இசை பயணத்துக்கு இது ஒரு சவாலாக அமைந்துள்ளது காட்சிக்கு ஏற்ற இசை எது வேண்டுமோ அதை நன்றாக அறிந்து அமைக்கப்பட்டு உள்ளது,
ஒளிப்பதிவு ஜே. யுவராஜ் ஒரு பைக் ரேஸ் களம் எவ்வாறு இருக்குமோ அதை நம் கண் முன்னே காட்சியாக அமைத்துள்ளார் அது மிகச் சிறப்பு தான் என்று சொல்ல வேண்டும்
இயக்குனர் அபிலாஷ் ரெட்டி, ஒரு பரவலாக பேசப்படாத விளையாட்டை பொதுமக்கள் மனதில் பதியும்படி எளிமையாகவும், அதே நேரத்தில் தாக்கமுள்ளதாகவும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் பைக்கர் சாதிக்கத் துடிக்க இளைஞனின் உணர்வுகளையும், கனவுகளும், மெய் பட வேண்டும்.

