கொலைச்சேவல் -திரைவிமர்சனம்

cinema news movie review

கொலைச்சேவல் -திரைவிமர்சனம்

நடிகர்கள்: கலையரசன், தீபா பாலு, பால சரவணன் , கஜராஜ் மற்றும் பலர்.

இசை:சந்தன்,

ஒளிப்பதிவு : முத்தையா,

இயக்குனர் :துதிவாணன்,

தயாரிப்பு:ஆர்.பி. பிலிம்ஸ்  ஆர்.பி. பாலா.

கதாநாயகனும் (கலையரசன்) கதாநாயகியும்  (தீபா பாலு) வெவ்வேறு சமூகத்தை  சேர்ந்தவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். கதாநாயகி தன் பெற்றோர் எதிர்ப்பை மீறி  காதல் திருமணம் செய்து கொண்டு, கதாநாயகன் கிராமத்தில் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், கதாநாயகி நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் காட்டுக்குள்ள இருக்கும் குலதெய்வம் நிறைசூலி அம்மனுக்கு சேவலை காணிக்கையாக கொடுத்து பொங்கல்  படைத்து  நிறைவேற்ற வேண்டும் என்று  தன் குடும்பத்தினருடன் புறப்படுகிறார்கள்.  இதனை அறிந்து கதாநாயகின் அப்பா அவர்களை பழி வாங்க திட்டமிடுகிறார். இவர்கள் வேண்டுதல் நிறைவேறியதா  அல்லது பழிவாங்கும் நோக்கம் நடந்ததா என்பது தான் மீதி கதை.

கலையரசன் நடிப்பில்எப்பொழுதும் தனி முத்திரை பதிப்பார் அதை இப்படத்திலும் கிராமத்தை எதார்த்தமான இளைஞனாகவும் தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். தீபா பாலு கிராமத்துப் பெண்ணாக அழகாகவும் அமைதியான நடிப்பில் வெளிப்படுத்தி தன் நடிப்பில் நம் மனதை கவரை செய்கிறார், இது முதல் படம் போல் இல்லாமல் தோன்றுகிறார். பால சரவணன் அங்கங்க நம்மை சிரிக்க வைக்கிறார்.

இசை சந்தன் படத்தின் பின்னணி இசை சற்று பலம் தான் சில காட்சிகளில் வரும் சத்தம் நம்மை மிரள செய்கிறது பாடல்கள் சுமார் தான்.

ஒளிப்பதிவு முத்தையா அதிகப்படியான டோன் காட்சிகள் தவிர்த்திருக்கலாம்.

இயக்குனர் துதிவாணன் இயக்கியுள்ள கொலைச்சேவல் படத்தின் மூலம் ஜாதி வெறி ஆணவக் கொலை மையமாக கருத்தில் கொண்டு படமாக்கியதற்கு நன்றி, வரும் காதல் காட்சிகள் ரசனையாக உள்ளது படத்தில் ஒரே காட்சியை திரும்பத் திரும்ப வருவது சற்று சலிப்பு கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

மொத்தத்தில் கொலைச்சேவல் ஆணவ கொலை மக்கள் மனதில் தேவையில்லாத ஒன்று.