கேம் ஆப் லோன் திரைவிமர்சனம்

cinema news movie review

கேம் ஆப் லோன் திரைவிமர்சனம் 

நடிகர்கள்: நிவாஸ் ஆதித்தன், அபிநய்கிங்கர், எஸ்டர் நோரோன்ஹா, அத்விக் ஜலந்தர்.

இசை :ஜோ கோஸ்டா,

ஒளிப்பதிவு: சபரி,

இயக்கம் :அபிஷேக் லெஸ்லி,

தயாரிப்பு: N.ஜீவானந்தம். JRG.

இந்த காலத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை வைத்து ஆன்லைனில் சூதாடும் இளைஞர்களின் வைத்து அதில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆன்லைனில் பெரும் லோன், அதில் ஏற்படும்,பிரச்சனைகள், விளைவுகள் பின்னணி என்னவென்று  மையமாக வைத்து உருவாக்கிய படம் தான் கேம் ஆப் லோன் இந்த கதாநாயகன் அதில் சிக்கிக் கொண்டு அந்த சூழலில் இருந்து அவர் எப்படி தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதி கதை கொஞ்சம் கற்பனையோடு கலந்து சொல்ல வந்திருக்கிற படம் தான் இந்த படம்.

இப்படி ஒரு ஆன்லைன் சூதாட்டத்தில் கடனாளியாக ஆகி தற்கொலை செய்து கொள்ளும் பலரின் செய்திகளை செய்தித்தாள் மூலமாகவும் தொலைக்காட்சியில் செய்திகளாகவும் அவர் அடிக்கடி பார்த்து விட்டு, நாமும் ஒரு நாள் அதை போல் மாட்டிக் கொள்வோம் என்று எண்ணாமல் சாதாரணமாக கடந்து விடுகிறார், அப்படி ஒரு நாள் அவருக்கும் நெருங்கி விடுகிறது அவர்  வீட்டிற்கு இரண்டு நபர்களும் வந்துவிடுகிறார்கள்.
அப்போதுதான் அவருக்கும் புரிகிறது இதுவரை செய்து கொண்டவர்கள் தற்கொலைகள் அல்ல இப்படி ஒரு சில மனிதர்களால் தூண்டலின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று எண்ணம் தோன்றுகிறது.
கதாநாயகன் நிவாஸ் ஆதித்தன் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார்  கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் இளைஞரின் தவிப்பும் மன வலியும் அவர் முகத்தில் காட்டும் பாவனைகள் வியக்க வைக்கும் அளவில் சிறப்பாகவே உள்ளது. அதுவும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க மாட்டோமோ  ஒரு வாய்ப்பு கிடைக்காதோ என்ற ஏக்கம் நடிப்பின் உச்சம். அவருக்கு மனைவியாக வரும் எஸ்டர். அனைவரின் கவனம் ஈர்க்கிறார்.


நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரத்தில் அபிநய் நடித்திருக்கிறார் குறிப்பாக அதுவும் அவர் மிரட்டுகிறார் என்று சொல்லக்கூட முடியாத அளவிற்கு அழகாகவும் ஸ்டைலாகவும் நடித்துள்ளார். இவருக்கு இணையாக உதவியாளராக நடித்திருக்கும் ஆத்விக் நடிப்பும் மிகச் சிறப்பு தான் என்று சொல்ல வேண்டும் இவர்கள் இருவரும் கதாநாயகனை கடனைக் கேட்டு மிரட்ட வந்திருக்கிறார்களா? இல்லை நண்பர்களா? என்று சற்று நம்மை யோசிக்க வைக்கும் அளவிற்கு இவர்களின் நடிப்பு அமைந்துள்ளது.

இப்படிப்பட்ட திரில்லர் படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்று தன் பின்னணி இசை மூலமாக நிரூபித்துக் காட்டி உள்ளார் இசை அமைப்பாளர் ஜோ. கோஸ்டா காட்சிகளில் அதிர வைக்கிறது.

ஒளிப்பதிவு ஒரே ஒரு அறை என்று இல்லாமல் பலவிதமான கோணங்களில் படமாக்கி காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் சபரிக்கு ஒரு சபாஷ்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் அபிஷேக் லெஸ்ஸி இக்காலகட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் மற்றும் ஆன்லைனில் பெறப்படும் கடன்கள் அதில் ஏற்படும் விளைவுகள் உண்மையின் சம்பவங்களையும் மற்றும் கற்பனையும் வைத்து திரையின் வழியாக வெளி காட்டியிருக்கிறார் காட்சிகளும் வசனங்களும் மிரளவைக்கும் அளவில் உள்ளது,நம்மையே யோசிக்க வைக்கும் அளவில் திரைப்படம் அமைந்திருக்கிறது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு அறை மூன்று நபர்கள் வைத்து படமாக காட்டி இருக்கிறார் அவர் திறமைக்கு நிச்சயம் நம்ம பாராட்டியாக வேண்டும்.

மொத்தத்தில் கேம் ஆப் லோன் இந்த காலத்திற்கு ஏற்ற படம்,ஒரு பாடம்.