ரெட் ஃபிளவர் திரைப்படம் – ₹50,000 பரிசுப் போட்டி அறிவிப்பு

cinema news News

ரெட் ஃபிளவர் திரைப்படம் – ₹50,000 பரிசுப் போட்டி அறிவிப்பு

நேற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “ரெட் ஃபிளவர்” தமிழ் திரைப்படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தில், கதாநாயகனாக விக்னேஷ், கதாநாயகியாக மனிஷா ஜித் நடித்துள்ளனர். மேலும் நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்தினம், லீலா, சாம்சங் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – சந்தோஷம், ஒளிப்பதிவு – தேவ சூர்யா, எடிட்டிங் – அரவிந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆண்ட்ரு பாண்டியன்.

*படத்தின் கதாநாயகன் விக்னேஷ் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளார்:*

“ரெட் ஃபிளவர்” படத்தில், இந்திய பெண்கள் மால்கம் டைனஸ்டி கமாண்டோஸ் என்பவர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.
அந்த கமாண்டோஸில் எத்தனை பேரை ஏஜென்ட் விக்கி (ஹீரோ) கொன்றார்?

சரியான பதிலை கூறி ₹50,000 ரொக்கப் பரிசை வெல்லுங்கள்!

“ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்த்து, சரியான பதிலை கூறி பரிசை தட்டிச் செல்லுங்கள்!” என்று நடிகர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

நன்றி
*நடிகர் : விக்னேஷ்*
*ஷேக் PRO & Team*