மார்கன் –  திரைவிமர்சனம் 

cinema news movie review

மார்கன் –  திரைவிமர்சனம் 

 

நடிகர்கள்: விஜய் ஆண்டனி ,தீப்ஸிகா சமுத்திரகனி, பிரிகேடியா, அஜய் திஷான், பிரித்திகா கனிமொழி மற்றும் பலர்

இசை:விஜய் ஆண்டனி

இயக்கம்:லியோ ஜான்பால்

 

 

படத்தின் ஆரம்பத்திலே சென்னையில் ஒரு பெண்ணை கொலை செய்கிறான் அவளின் பிணத்தை குப்பை தொட்டியில் போடுகிறான்.

அந்த பிணம் உடல் முழுவதும் கருத்து காணப்படுகிறது.இந்த கொலை இந்தியாவையே பரபரப்பாகிறது. இந்த கொலையை விஜய் ஆண்டனிக்கு தெரியவர அவர் உடனடியாக இந்த கொலையை நான் துப்பு செய்கிறேன் என்று சொல்ல இந்த கொலை சென்னையில் நடந்து இருக்கு டெல்லியில் இருக்கும் உங்களுக்கு என்ன என்று போலீஸ் சொல்ல ஆனாலும் நான் இந்த கேசை நான் தான் துப்பு துல்லகுவேன் என்று சென்னை வருகிறார். இந்த கொலையை யார் செய்ததது என்ற துப்பை கண்டு பிடித்தாரா என்பது தான் மீதிகதை.

 

எடிட்டர் லியோ ஜான் பால் இந்த படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்து இருக்கிறார். முதல் படம் என்பது மிக முக்கியமான படம்

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ திரைப்படம் த்ரில்லராக தொடங்கி, அந்த பாதையில் நன்றாகவே செல்ல ஆரம்பிக்கிறது.இது சாதாரண ஒரு த்ரில்லர் படமாகவே மாறுகிறது.

படத்தின் திரைக்கதையை பொறுத்தவரை முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என இரண்டிலும் ஒரே மீட்டரை மெயின்டையின் செய்தது படத்திற்கு பிளஸ். அதேபோல் முதல் பாதி திரைக்கதையில் அஜய் தீஷனின் ப்ளாஷ் – பேக்கிலேயே கொண்டு சென்றது படத்திற்கு கொஞ்சம் தொய்வு தான். அதேபோல், யுவாவின் ஒளிப்பதிவும் லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் பரபரப்பை கூட்ட முயற்சிக்கிறது. படத்தை எழுதி இயக்கியது மட்டுமல்லாமல் படத்தொகுப்பு லியோ ஜான் பால் செய்துள்ளதால், படத்தொகுப்பும் கவனிக்க வைக்கிறது. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை பயத்தையோ பரபரப்பையோ கூட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், படத்துக்கு ஓரளவுக்கு சப்போர்ட் செய்துள்ளது. நடிப்பு மற்றும் மேக்-அப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்

அதேபோல், அஜய் தீஷன் தனது கற்பனையில் கொலை நடந்த இடத்திற்கும், கொலையாளியை பின் தொடர்ந்து செல்வதையும் பார்க்கும்போது இது டைம் டிராவல் படமா என்ற சந்தேகமே எழுந்துவிட்டது. அதற்கு படத்திலேயே அறிவியல் பூர்வமாக விளக்கம் கொடுத்தது அருமை. படத்தின் கிளைமேக்ஸில் கொலையாளியின் நோக்கம் மட்டுமல்லாது, முந்தைய கொலைகள் எல்லாவற்றையும் கனெக்ட் செய்ததற்காகவே இயக்குநருக்கு தனி பாராட்டுகள். கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிகர்களை திருப்தியுடனே சீட்டில் இருந்து எழுந்து செல்ல வைக்கிறது. மக்கள் கவனம் பெற்றால் மார்கன் விஜய் ஆண்டனி திரை வாழ்க்கையில் நல்ல மார்க் வாங்கிய படமாக மாறும்.