பரமசிவன் பாத்திமா-திரைவிமர்சனம்

cinema news movie review

பரமசிவன் பாத்திமா-திரைவிமர்சனம்

 

நடிகர்கள்:விமல்,சாயா தேவி,ம். M. S. பாஸ்கர்,cool சுரேஷ், மாற்று பலர்

இசை:தீபன் சக்கரவர்த்தி

இயக்கம்: இசக்கி கார்வண்ணன்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பின்புலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம், மத மாற்றத்தின் தாக்கத்தால் மூன்று தனி கிராமங்களாகப் பிரிகிறது. இந்த பிரிவின் பின்னணியில் உருவாகும் மத மோதல்கள், பின்னணியில் நடக்கும் கொலைகள், விசாரணையை திசைமாறச் செய்கின்ற சூழ்நிலைகள் என ஒன்றுக்கொன்று பின்னிய ஒரு கதையையே ‘பரமசிவன் பாத்திமா’ சொல்ல முயல்கிறது.

விமல் மற்றும் சாயா தேவி இவர்கள் ஏன் கொலை  செய்கின்றார்கள் இவர்கள் வாழ்க்கையில்  நடந்த பின்னணியில் என்ன மர்மம் உள்ளது. என்பது மீதி கதை.

பாதரியராக எம்.எஸ். பாஸ்கர், போலீசாக இசக்கி கார்வண்ணன் ஆகியோர் அதிக உரையாடல்களை ஆளும் போதிலும், அவர்கள் சொல்வதன் சிறப்பு,

இசையில் தீபன் சக்கரவர்த்தி தன் வேலையை சரியாக செய்துள்ளார்.  பாடல் நன்றாக உள்ளது.

இயக்குநர் இசக்கி கார்வண்ணன், தனது திரைக்கதையில் மதங்களை விமர்சன ரீதியில் காண்பிக்கவும் செய்திருப்பது பெரிதும் கவனிக்கத்தக்கது அவர் படத்தின் மூலமாக என்ன சொல்லவருகிறார் என்பது சிறு தடுமாற்றம்.

மொத்தத்தில் பரமசிவன் பாத்திமா’ மத சுமை.