full screen background image
Search
Wednesday 15 May 2024
  • :
  • :
Latest Update

பிக்பாஸ் சீசன் 4-இல் கலந்துகொள்ளும் அஜித் பட ஹீரோயின்?

வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.

தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்னும் அறிவிக்கப்பட வில்லை. இருப்பினும் அவ்வப்போது சில நடிகைகளின் பெயர்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், தற்போது பிரபல நடிகை வசுந்தரா தாஸ் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இவர் அஜித்துக்கு ஜோடியாக சிட்டிசன், கமலுக்கு ஜோடியாக் ஹே ராம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.