ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் பாலிவுட் நடிகை

News

‘கபாலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துகாத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஜினியின் சமீபகால படங்களான ‘எந்திரன்’ படத்தில் ஐஸ்வர்யராய், ‘கோச்சடையான்’ படத்தில் தீபிகா படுகோனே, ‘லிங்கா’ சோனாக்ஷி சின்ஹா, கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்தில் ராதிகா ஆப்தே என பாலிவுட் நடிகைகள் நடித்து வந்தனர்.

அந்த வரிசையில் ரஜினி, ரஞ்சித் இணையும் புதிய படத்தில் பாலிவுட் நடிகையை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் வித்யாபாலனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. தற்போது, மற்றொரு பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *