full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

‘கெஸ்ட்’ ரோலில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி..???

 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகிறது ‘சங்கத்தமிழன்’. தீபாவளி வெளியீடாக வரும் என எதிர்பார்த்த நிலையில் நவம்பர் மாதத்திற்கு தள்ளி சென்றது.

விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், சூரி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இதனையடுத்து விஜய் சேதுபதி ‘தளபதி 64’, ‘லாபம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தில் ரித்திகா சிங், வாணி போஜன், ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.