full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

எனை நோக்கி பாயும் தோட்டா பட பிரபலம் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போய் தாமதமாகி வருகிறது.இந்த படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார்.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு டர்புகா சிவா இசையமைத்துள்ளார்.இவரது இசையில் பாடல்கள் செம ஹிட்டடித்துள்ளன.தற்போது டர்புகா சிவா இயக்குனராக அறிமுகமாகிறார்.சூப்பர் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.செம பிஸியாக வளர்ந்து வரும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.