full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

சரண் – ஆரவ் கூட்டணியில் இணைந்த ராதிகா

`ராஜ பீமா’ படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

 

 

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஆரவ் மார்க்கெட் ராஜாவாக டான் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆரவ் ஜோடியாக காவ்யா தபூர் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, சாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ராதிகா ஆரவ்வுடன் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

சிமோன் கே.கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.வி.குஹான் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இவர் சரணின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.