விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்!

News

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக கைகோர்த்துள்ள படம் தான் ‘விஸாசம்’.

இப்படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதன் முறையாக டி இமான் இசையமைத்திருக்கிறார். நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ‘அட்ச்சி’ பாடலின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் கர்நாடகா உரிமையை ‘ஹரிஸான் ஸ்டுடியோ’ என்ற பெரிய நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர்.