full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

தலைவராக பதவியேற்றுக் கொண்ட மோகன்லால்

கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் எம்.பி. இருந்துவந்தார்.

இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்னசென்ட் அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடிகர் சங்க கூட்டம் கொச்சியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளராக இடைவேளை பாபு, துணைச் செயலாளராக நடிகர் சித்திக், பொருளாளராக ஜெகதீஷ் உள்பட பல்வேறு பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளும் தேர்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும் சங்கத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பிரபல மலையாள நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்துவந்தார். கடந்த ஆண்டு நடிகை கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்பட்டார்.

தற்போது கொச்சியில் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் திலீப் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. நடிகர் சங்க விதிகளுக்கு மாறாக நடிகர் திலீப் நீக்கப்பட்டதாக கூறி அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.