full screen background image
Search
Sunday 19 May 2024
  • :
  • :
Latest Update

மனிதர்களுக்குள் இருக்கும் போதைகளைப் பற்றிப் பேச வரும் “போத”

Fifty Fifty Films Entertainment நிறுவனமும் மண்று ஜி.வி.எஸ். புரொடெக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘போத’.

இந்தப் படத்தில் விக்கி, வினோத், முன்னா, மிப்பு, ஈஸ்வர், சண்முகசுந்தரம், ராகுல் தாத்தா, வீரா, சக்திவேல் தங்கமணி, ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரத்னகுமார், படத் தொகுப்பு – தியாகராஜன், இசை – சித்தார்த் விபின், பாடல்கள் – லலிதானந்த், நடனம் – சங்கர், எழுத்து, இயக்கம் – ஜி.சுரேஷ்.

போத

‘போத’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜி.சுரேஷ், “இந்தக் காலத்தில் பணம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. அதே சமயம் அதே பணத்தை வைத்து எல்லாக் காலத்திலும் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. இந்த யதார்த்த உண்மையைத்தான் இத்திரைப்படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறோம்.

நமக்குத் தெரிந்து மனிதர்களுக்குள் எத்தனையோவிதமான போதைகள் இருக்கின்றன. நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அந்த போதைகளுக்கு நாமும் ஆட்பட்டிருக்கிறோம். அதில் நமக்குத் தெரியாமலேயே நம்மை ஆக்கிரமித்திருக்கும் ஒருவிதமான போதையைப் பற்றித்தான் இந்தப் படம் பேசுகிறது.

முழுக்க, முழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.