full screen background image
Search
Sunday 19 May 2024
  • :
  • :
Latest Update

உறுதியானது ரஜினி – விஜய் சேதுபதி மாஸ் கூட்டணி!!

“சன் பிக்சர்ஸ்” தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது கார்த்திக் சுப்புராஜ் என்பது எல்லோரும் அறிந்ததே..

ரஜினிகாந்த் தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் அவர் திரும்பிய உடன், கார்த்திக் சுப்புராஜின் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் பணிபுரியும் கலைஞர்கள் விவரம் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

ஆனால், ஊடகங்களில் விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியிட்ட வண்ணமே இருந்தது. இந்நிலையில், ஊடகங்கள் ஊகித்து எழுதியது உண்மையாகி இருக்கிறது. ஆம், விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிருவனத்தின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் உருதி செய்திருக்கிறார்கள்.

இந்த செய்தியை ரஜினி ரசிகர்களும், விஜய் சேதுபதி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்!!