full screen background image
Search
Tuesday 7 May 2024
  • :
  • :
Latest Update

வில்லனை வாழ்த்திய மிஷ்கின்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், மஞ்சு வாரியார் அகியோருடன் முதல் முறையாக இணைந்து விஷால் நடிதிருக்கும் படம் “வில்லன்”. இந்த படத்தை பிரபல இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ராக்லைன் வென்கடேஷ் தயாரித்துள்ள வில்லன் படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் மிஷ்கின் புகந்து தள்ளியுள்ளார்.

“மிகச் சிறந்த நடிகராகிய மோகன் லால், இந்தப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மஞ்சு வாரியாரும் விஷாலும் தங்களது முதிர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். இம்மூவரது நடிப்பும் நிச்சயமாக பேசப்படும்.

வில்லன் படத்தை மிக அழகாக செதுக்கியுள்ளார் அதன் இயக்குனர் உன்னிகிருஷ்ணன். உணர்வுப்பூர்வமான காட்சிகளை த்ரில்லர் கதையில் மிக அழகாக பொருத்தியுள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்துகள்”

இவ்வாறு இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். முன்னதாக விஷாலை வைத்து மிஷ்கின் துப்பறிவாளன் என்னும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.