full screen background image
Search
Tuesday 7 May 2024
  • :
  • :
Latest Update

மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான “மெர்சல்”, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் திருமதி. தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.

படத்தில் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருப்பதாலும், கிண்டலடித்திருப்பதாலும் தனது கண்டனஙளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

மேலும் உடனடியாக படத்திலிருந்து குறிப்பிட்ட அந்த காட்சிகளை  உடனடியாக நீக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியையும், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.