full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

துள்ளி வரும் “மேயாத மான்”!

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான “ஸ்டோன் பெஞ்ச்” மற்றும் ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் “மேயாத மான்”.

வைபவ் மற்றும் விஜய் டிவி புகழ் ப்ரியா பவானி ஷங்கர் முன்னணி கதாபத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தை ரத்ன குமார் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே, சந்தோஷ் நாரயணனின் இசையில் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.

”படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டதாகவும், அதன்படி வருகிற நவம்பர் மாதம் 17 ஆம் தேதி கண்டிப்பாக திரைக்கு வரும்” என்றும் அதில் தெரிவித்துள்ளார்கள்.